spot_img
HomeNewsபன்மொழிகளில் உருவாகும் “கர்ணம் மல்லேஸ்வரி” வாழ்க்கை வரலாற்று திரைப்படம் ! 

பன்மொழிகளில் உருவாகும் “கர்ணம் மல்லேஸ்வரி” வாழ்க்கை வரலாற்று திரைப்படம் ! 

சமீபமாக இந்திய திரையுலகில் வாழ்க்கை வரலாற்று திரைப்படங்கள் மிகப்பெரும் வெற்றிதரும் படைப்புகளாக  மாறியுள்ளது. அரசியல், சினிமா, விளையாட்டு ஆகியவற்றில் சாதனை படைத்தவர்கள்  மேலும் சராசரி வாழ்வில் சாதனை படைத்து தனித்துவமிக்கவராக மாறி நிற்பவர்களின் வாழ்க்கை கதைகளை  திரைபடைப்பாளிகள் வெகு அற்புதமான திரைப்படங்களாக உருவாக்கி வருகின்றனர். பல்வேறு வாழ்க்கை வரலாற்று திரைப்படங்கள் உருவாகி வரும் இந்த சூழ்நிலையில் அனைவரையும் உற்சாகப்படுத்தும் வகையில் கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கை கதை திரைப்படமாக உருவாகவுள்ளது. பளுதூக்கும் போட்டியில் உலக அளவில் சாதனைகள் புரிந்து ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவர் “கர்ணம் மல்லேஸ்வரி” என்பது குறிப்பிடதக்கது.

இந்திய பெண்களுக்கு மிகப்பெரும் முன்னுதரானமாக விளங்கும் கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கை கதை பன்மொழிகளில் முழுமையான இந்திய திரைப்படமாக தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகிறது. பலரது எதிர்ப்பார்ப்பிற்குரிய இப்படைப்பினை MVV சத்யநராயணா ,  கொனா வெங்கட் ஆகிய இருவரும்  MVV Cinema மற்றும்  Kona Film Corporation சார்பில் தயாரிக்கிறார்கள்.  இயக்குநர் சஞ்சனா ரெட்டி இயக்க, கொனா வெங்கட் படத்தின் எழுத்து பணிகளை மேற்கொள்கிறார். படத்தின் நடிகர்,  நடிகையர் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் பற்றிய அறிவிப்பு விரைவில் அதிகராப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Must Read

spot_img