அமேசான் ப்ரைம் வீடியோ நிறுவனம் மிகவும் எதிப்பார்க்கப் படும் உளவியல் திரில்லர் திரைப்படமான “பெண்குயின்” படத்தின் போஸ்டரை இன்று வெளியிட்டது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் Stone bench Films மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் Passion Studios இணைந்து தயாரிக்கும் இந்த திரில்லர் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ளார். அனைத்து தரப்பினரையும் கவரும் வண்ணம் எதிர்பார்ப்பை எகிறச்செய்யும் வகையில் இப்படத்தின் டீஸர் அமைந்துள்ளது.
வருகின்ற ஜூன் 8 ஆம் தேதி , இந்தப் படத்தின் டீஸர் வெளியாகிறது. மிக விரைவில் ப்ரத்யேகமாக “பெண்குயின்” திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோ மூலம் ரசிகர்களை மகிழ்விக்க வரும் 19ம்தேதி வெளியிடப்படுகிறது.
நேரடியாக தமிழ் மற்றும் தெலுங்கிலும் மலையாளத்தில் டப்பிங் செய்யப்பட்டும் வெளியாகிறது ..