HomeNewsக/பெ ரணசிங்கம் – சினிமா விமர்சனம்

க/பெ ரணசிங்கம் – சினிமா விமர்சனம்

வெளிநாட்டில் வேலை செய்து வரும் கணவன் திடீர் என இறந்து விட கணவனின் பிணத்தை சொந்த ஊருக்குக்கொண்டு வர போராடும் மனைவியின் கதை தான்ரணசிங்கம் 

 இதுராமநாதபுரம் மாவட்டத்தில் தண்ணீர் பிரச்சினையில் தள்ளாடும் ஒரு கிராமத்தில் மக்களின் பிரச்சினைகளுக்காகப் போராடும் ஒரு இளைஞனாக வருகிறார் விஜய் சேதுபதி

. இவருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் திருமணம் நடக்கிறது. திருமணத்திற்குப் பிறகு குடும்ப சூழ்நிலை காரணமாக துபாய்க்கு வேலைக்குச் செல்கிறார். வேலைக்குச் சென்ற இடத்தில்  விபத்தில் அவர் உயிரிழந்து விட்டதாக தகவல் வருகிறது.

தனது கணவர் விஜய் சேதுபதியின் உடலை சொந்த ஊருக்கு எடுத்து வர போராடுகிறார் ஐஸ்வர்யா.

அந்தப் போராட்டம் பத்து மாதங்கள் வரை நீடிக்கிறது. கடைசியில் அவரது போராட்டத்தில் அவருக்கு வெற்றி கிடைத்ததா, இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

படத்தின் நாயகன் விஜய் சேதுபதி கதையுடன் ஒன்றி நடித்திருக்கிறார்

ஒரு போராளி , சொந்த ஊர்ல நடக்கும் எல்லாப்பிரச்சனைகளுக்கும் போராட்டம் பண்ணி மக்களை விழிப்புணர்வுக்குள்ளாக்கி பல நல்லது பண்றார். 

கதையில் வரும் முதல் பாதியில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷின் இயல்பான கிராமத்துக் காதல் காட்சிகள் அழகாக கண்முன் காட்சி படுத்திருக்கிறார் இயக்குநர்

. மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கும் துடிப்பான இளைஞராக விஜய் சேதுபதி. ஆனால் இவரை விடவும் இந்த படத்தில் அதிகம் பேசப்படுகிறார் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ்.

டெட் பாடியை வர வைக்க நாயகி போராடுவது கணவர் ரணசிங்கத்தின் உடலை பல போராட்டங்கள் வந்தாலும் சொந்த ஊருக்குக் கொண்டு வருவதில் விடாது போராடும் சிங்கப் பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார்

.விஜய் சேதுபதியின் தங்கையாக வரும் பவானி அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறார். காட்சிகளின் அழுத்ததைக் கூட்டியிருக்கிறது ரங்கராஜ் பாண்டே , முனீஷ்காந்த் உட்பட பலரது நடிப்பும்.மிகப்பிரமாதம்

 பின்னணி இசைஜிப்ரான்.வறட்சியை தெளிவாக காட்சியில் பதிவு செய்கிறார் ஒளிப்பதிவாளர்

 இதுவரை யாருமே தொடாத ஒரு கதைக்கருவை , சமூக விழிப்புணர்வுடன் கூடிய ஜனரஞ்சகப்படமாக அதுவும் ஒரு இயக்குநர் தன் முதல் படமாக தந்ததில் கவனிக்க வைகிறார். மனைவியின் பிரச்சினையையும் ஒன்றாக இணைத்து சிந்திக்கவும், ரசிக்கவும் செய்து இன்றைய அரசியல் நிலவரத்தை கதையில் நம் கண்முன் நிறுத்தியிருக்கிறார் இயக்குநர் விரும்பாண்டி

Must Read

spot_img