Kanmaniye
(Album Song)
ARK Entertainment , அருண்ராஜா காமராஜ்-இன் தயாரிப்பு நிறுவனம், அதன் யூடியூப் தளத்தில் வெளியிட்டிருக்கும் மூன்றாவது சுயாதீன பாடல் ‘கண்மணியே’. இதற்கு முன்பே வெளியான ‘கண்ணக்குழி அழகே’ மற்றும் ‘ சே’ போன்ற பாடல்கள் பல லட்சம் பார்வையாளர்களை கடந்து, இன்றும் ரசித்து கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.
ARK Entertainment Youtube Channel தினம் தினம் அதிகரிக்கும் சப்ஸ்கிரைபர்ஸுடன் இயங்கிக் கொண்டிருக்கிறது.
இந்த பாடல் மிக பெரிய பொருட் செலவில் எடுக்கப்பட்டிருக்கிறது, அதற்கான பரிசாக ரசிகர்களின் ஆதரவை அமோகமாக பெற்றுள்ளது.
Arunraja Kamaraj – நடிகராக, கவிஞராக, பாடகராக இருந்தவர், ‘கனா‘ திரைபடத்தின் ஹிட் மூலம் இயக்குனராக தடம் பதித்தவர்,
இன்று சுயாதீன பாடலுக்கு தயாரிப்பாளராகவும் வளர்ந்திருக்கிறார்,
இந்த கொரோனா லாக்டவுன் நேரத்திலும் ‘கண்ணக்குழி அழகே’, ‘சே’ என இரண்டு பாடல் வெளியிட்டிருந்தார், இப்போது ‘கண்மணியே’ என்ற சுயாதீன பாடல் மூலம் நடிகர் ‘பரத்’-தை வைத்து இயக்கி, தயாரித்து, எழுதி, பாடி தனது யூடியூப் சேனல் மூலம் ரிலீஸ் செய்திருக்கிறார்.
சமீபத்தில் நடித்த ‘காளிதாஸ்’ எனும் திரில்லர் படம் வரையிலும் இன்றளவும் ரசிகர்களின் ஆதரவை பெற்று, இன்றைய சூழலுக்கு ஏற்றாற்போல் பல தளங்களில் (வெப் சீரிஸ், ஆல்பம் சாங்ஸ் ) நடித்துக்கொண்டிருக்கும் பரத்.
இன்றும் ‘பாய்ஸ்’ படத்தில் பார்த்த அதே இளமையுடனும், துடிப்புடனும் ‘கண்மணியே’ பாடலுக்கு நடித்து நடனமாடியிருக்கிறார்.
ஃபேஷன் மாடல் கிருத்திகா பாபு, இந்த ‘கண்மணியே’ பாடலிலும் அவரின் இயல்பில் மாடலாகவே நடித்திருக்கிறார்.
தமிழில் பல படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்திருக்கும் சதிஷ் மாஸ்டர் , ஏற்கனவே ‘கனா’ படத்தில் ‘ஒத்தையடி பாதையிலே’ எனும் பாடலுக்கு அருண்ராஜா காமராஜ், தினேஷ் கிருஷ்ணன்.B, லால்குடி N இளையராஜா போன்றவர்களுடன் சேர்ந்து பங்காற்றியவர். இந்த ‘கண்மணியே’ பாடலுக்கு நடன இயக்குனராகவும், அதில் நடித்தும் இருக்கிறார்.
‘சூதுகவ்வும்’, ‘தானா சேர்ந்த கூட்டம்’ ‘Mr. லோக்கல்’ ‘கனா’ போன்ற பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் தினேஷ் கிருஷ்ணன். B,
அடுத்தடுத்து படங்கள் என பிஸியாக இருப்பவர், இந்த ‘கண்மணியே’ பாடலுக்கு பலமாக, visual-லை வண்ணங்களில் வடிவமைத்திருக்கிறார்.
தேசிய விருது பெற்ற கலை இயக்குனர் லால்குடி N இளையராஜா , இதில் நண்பராக கை கோர்த்து. கலைத்துவமான, பிரம்மாண்டமான அரங்கு வடிவமைப்பில் உருவான பாடலாக மாற்றியிருக்கிறார்.
‘தர்பார்’ , ‘ ஜிப்சி’ , ‘சூரரைப் போற்று’ போன்ற படங்களுக்கு ஒலி கலவை செய்த சுரேன், இந்த பாடலுக்கு சிறப்பான ஒலி கலவை மூலம் ரசிக்கும்படி செய்திருக்கிறார்.
தமிழில் பல பெரிய படங்களுக்கு நிர்வாக தயாரிப்பாளராக பணிபுரியும் S.P.சொக்கலிங்கம், இந்த பாடலுக்கும் நிர்வாக தயாரிப்பாளராக துணை நின்றது கூடுதல் மகிழ்ச்சி.
தெறி, தனிஒருவன், மீசைய முறுக்கு (Keyboard Programmer – Songs and Back ground score) போன்ற படங்களில் பணிபுரிந்த கணேசன் சேகர், இந்த பாடலுக்கு இசை அமைத்து மெருகேற்றியிருக்கிறார். இவர் ஏற்கனவே ARK Entertainment-டில் வெளியான இரண்டு பாடலுக்கும் இசை அமைத்தவர்.
ராஜா ஆறுமுகம் எடிட்டர் ரூபனின் உதவியாளர், இந்த பாடலின் மூலம் எடிட்டராக பொறுப்பேற்றிருக்கிறார். ஆடை வடிவமைப்பாளர் தனு தனது Sattvikee நிறுவனத்தின் மூலம் அழகான ஆடைகளை தந்துள்ளார். ரதி ராதிக்கா ஒப்பணையும், விமல் Tonz CG-யையும், V. அசோக் குமார் இணை தயாரிப்பு என அவர்களின் பங்கை நேர்த்தியாகவும், கூடுதல் பலமாகவும் இருந்தனர்.
இப்படி பல பிரபலங்களும், அனுபவமிக்கவர்களும், புதுமுக கலைஞர்களும் நட்புடன் சேர்ந்து கூட்டு முயற்சியில் இந்த ‘கண்மணியே’ படலை ARK Entertainment–ற்காக உருவாக்கியிருக்கிறார்கள்.
பாடலை காண ARK Entertainment – Youtube Channel-லை பார்க்கவும்.