Monthly Archives: March 2021
Varisi
The audio launch of a romantic mystery-thriller set against a backdrop of serious social issues happened in Chennai. The occasion had the entire cast...
கர்ணன் இசை வெளியீட்டு விழா
தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தை கலைப்புலி S தாணு தயாரிக்க மாரி செல்வராஜ் இயக்குகிறார் . சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பில் பாடல்கள் உருவாகி வெளியானது . இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு...
கோலிவுட்டின் கவனம் ஈர்த்த ’ரூம்மேட்’
கோலிவுட்டின் கவனம் ஈர்த்த ’ரூம்மேட்’
கொரோனா பரவலால் பாதிக்கப்பட்ட பல துறைகளில் மிக முக்கியமான துறையாக சினிமா துறை உள்ளது. அதிலும், மற்ற துறைகள்
மீண்டும் பழைய நிலைக்கு திரும்பினாலும், சினிமா துறை தற்போதும் பல...
காடன் விமர்சனம்
காட்டிலேயே தங்கி, யானைகளுக்கு பாதுகாப்பாகவும், பறவை மொழியில் காட்டுப்பறவைகளிடம் பேசிக்கொண்டும் அக்காட்டிலேயே வாழ்ந்து இயற்கையோடு ஒன்றி வாழ்கிறார் காடன்.வீரபாரதி என்கிற காடன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ராணா
Township உருவானால் யானைகளின் வாழ்வாதாரம் பாதிக்கும், யானைகள் அழிந்தால்...
பண்டாரத்தியை மஞ்சனத்தி என்று அழைக்கலாம் ”மாரிசெல்வராஜ்”
அனைவருக்கும் அன்பின் வணக்கம்.
கர்ணன் திரைப்படம் தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை நீங்கள் அளித்துவரும் ஆதரவும் நம்பிக்கையும் எனக்கு பெரும் உத்வேகத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. ஒரு இளம் இயக்குநரான என் மீதும் நீங்கள் காட்டும்...
“வேலன்” படத்தில் மலையாளி வேடமேற்கும் நடிகர் சூரி !
“வேலன்” படத்தில் மலையாளி வேடமேற்கும் நடிகர் சூரி !
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக கலக்கிய சூரி, அடுத்தடுத்த படங்களில் வெவ்வேறு அவதாரங்களில், ரசிகர்களை மட்டுமின்றி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி வருகிறார். தமிழின் அதிமுக்கிய இயக்குநர்...
நடிகர் அசோக் செல்வனின் இதயம் கனிந்த நன்றிகள் !
நடிகர்கள் மட்டுமே, ஒரு பிறப்பில் பல வாழ்க்கை பாத்திரங்கள் வாழ ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு புதிய பிறப்பாக பிறந்து, அதில் வாழ்ந்து பார்க்கும், ஆசி அவர்களுக்கு கிடைக்கிறது. இந்த சுழற்சி திரையில்...
குட்டி பட்டாஸ்’
குட்டி பட்டாஸ்’
சோனி மியூசிக் என்டர்டெயின்மென்ட் மற்றும் தி ரூட் - நாய்ஸ் அண்ட் க்ரெய்ன்ஸ் இணைந்து அட்டகாசமான ‘குட்டி பட்டாஸ்’ என்கிற வீடியோவை இன்று வெளியிட்டுள்ளனர்.
வண்ண மயமான, துள்ளலிசைப் பாடலான இதில் குக் வித் கோமாளி புகழ் அஷ்வின் குமாரும், பிகில் புகழ் ரெபா மோனிகா ஜானும் நடித்துள்ளனர்.
சந்தோஷ் தயாநிதி இசையமைத்திருக்கும் இந்த தனிப்பாடல் அதன் ப்ரோமோ வெளியான தருணத்திலிருந்தே இணையத்தில் பரபரப்பை உருவாக்க ஆரம்பித்துவிட்டது.
ஒரே நாளில் 30 லட்சம் பார்வைகளை பெற்று அந்தப் ப்ரோமோ ட்ரெண்டிங் ஆனது. சாண்டி மாஸ்டர் உருவாக்கிய, எல்லோரும் எளிதில் ஆடக்கூடிய ஒரு நடனத்தால் பல இளைஞர்கள் இந்தப் பாடலோடு சேர்ந்து நடனமாடுவார்கள் என்பது உறுதி.
வெங்கி இயக்கத்தில் உருவான இந்தப் பாடல், பார்ப்பவர்களின் முகத்தில் புன்னகையை வரவழைக்கும். உடனே இணையத்தில் இந்த ‘குட்டி பட்டாஸ்’ பாடலைக் கொண்டாடி ரசியுங்கள்.
Song Link - https://youtu.be/KfUExOXxU5Q
நானும் OTT தளம் துவங்குவேன் T.ராஜேந்தர் பேச்சு
நானும் OTT தளம் துவங்குவேன் " தண்ணி வண்டி " பட விழாவில்
இயக்குனரும், நடிகருமான T.ராஜேந்தர் பேச்சு
சத்யராஜ் நடித்த அடாவடி படத்தை தயாரித்த ஸ்ரீ சரவணா பிலிம் ஆர்ட்ஸ் G.சரா பெருமையுடன் வழங்க G.சரவணா தயாரிக்க, ராசுமதுரவன், மனோஜ்குமார், தரும்கோபி ஆகியோரிடம் உதவியாளராக பணிபுரிந்த மாணிக்க வித்யா இயக்கியுள்ள படம் " தண்ணிவண்டி "
நடிகர் தம்பி ராமைய்யா மகன் உமாபதி ராமைய்யா கதானாயகனாக நடித்துள்ளார். நாயகியாக சம்ஸ்கிருதி நடித்துள்ளார். மற்றும் பாலசரவணன், தம்பிராமைய்யா, தேவதர்ஷினி, வினுதலால், ஆடுகளம் நரேன் ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தின் டிரைலரை இயக்குனரும், நடிகருமான T.ராஜேந்தர் வெளியிட்டார்.
டிரைலரை வெயிட்டு இயக்குநர் டி.ராஜேந்தர் பேசியதாவது..
"ஓடிடி என்பது காலத்தின் கட்டாயம். தமிழ்நாட்டில் ஒரு பெரிய நிறுவனம் ஏ.வி.எம் நிறுவனம். அவர்கள் இன்று ஓ.டி.டி தளத்தில் கால் பதிக்கிறார்கள் என்றால் இது காலத்தின் கட்டாயம். அடுத்த கட்டம் ஓடிடி தளம் என்பதால் நான் கூட ஒடிடி தளம் துவங்குவேன் ..எதற்கு என்றால் சிறிய தயாரிப்பாளர்களுக்கும், புதிய இயக்குநர்களுக்கும், போராடும் படைப்பாளிகளுக்கு தேவை ஒரு தளம். அதற்கு நாங்கள் ஏற்படுத்தித் தருகிறோம் ஒரு களம். தியேட்டரில் கட்டணங்களைக் குறைக்க வேண்டும் என்று நான் பல காலமாக சொல்லி வருகிறேன். ரெயிலில் கூட பர்ஸ்ட் க்ளாஸ், செகண்ட் க்ளாஸ்,இருக்கு. சினிமா தியேட்டரில் மட்டும் எல்லாம் ஒரே சீட்டு! இது என்ன சர்வதிகார நாடா? இல்ல ஜனநாயக நாடா? டிக்கெட் 100,150 என்று இருந்தால் ஒரு ஏழை எப்படி குடும்பத்தோடு படம் பார்க்க முடியும்?
டிக்கெட் ரேட் தான் அதிகமென்றால் பாப்கார்ன் விலை 150 ரூபாய். ஆந்திராவில் இன்றும் படம் ஓடுகிறது என்றால் 50 ரூபாய் 70 ரூபாய் தான் டிக்கெட்.
டிக்கெட் கட்டணம் குறைக்க வேண்டும் என்று பேசுவதற்கு ஏன் யாருக்கும் துணிவில்லை? மனமில்லை? டிக்கெட் விலையை குறைத்தால் சிறியபடங்கள் வாழும். நாங்கள் ஏன் லோக்கல் வரி எட்டு சதவிகிதம் கட்ட வேண்டும் என்ற கேள்வியை கேட்டுக்கொண்டே இருக்கிறோம்.
படம் பார்க்க மக்கள் 50% தான் வரணும். ஆனால் ஜி.எஸ்.டி மட்டும் முழுமையாக கொடுக்கணும்! இந்த விசயங்களை எல்லாம் இன்று பேசுவதற்கு தண்ணிவண்டி படத்தின் டிரைலர் வெளியிட்டு விழா அமைந்தது. அனைவருக்கும் நன்றி" என்றார்.
விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
துல்கர் சல்மானின் “குருப்” டீஸர் !
துல்கர் சல்மானின் “குருப்” டீஸர் !
துல்கர் சல்மான், மொழி தாண்டி அனைத்து நெஞ்சங்களையும் கவர்ந்த அற்புத நடிகர். இளைஞிகளின் கனவு நாயகனாக காதல் செய்வதாகட்டும், அட்வெஞ்சர் கதைகளாகட்டும், அடுத்த வீட்டு பையன் தோற்றமாகட்டும்,...