spot_img
HomeNewsசரித்திரம் படைத்த சாதனை பெண்களை கௌரவித்த ரெய்ன்ட்ராப்ஸ் சமூக அமைப்பு 

சரித்திரம் படைத்த சாதனை பெண்களை கௌரவித்த ரெய்ன்ட்ராப்ஸ் சமூக அமைப்பு 

சரித்திரம் படைத்த சாதனை பெண்களை கௌரவித்த ரெய்ன்ட்ராப்ஸ் சமூக அமைப்பு 

‘ரெயின்டிராப்ஸ்’ சமூக அமைப்பின் சார்பில்  நடத்தப்படும் ‘பெண் சாதனையாளர்களை கௌரவிக்கும் விழா, சென்னையில் உள்ள ராணி சீதை மஹாலில் நடைபெற்றது

 

ரெயின்ட்ராப்ஸ் பல்துறை சார்ந்த இளைஞர்களை உள்ளடக்கிய சமூக அமைப்பாகும்.  இந்த அமைப்பு ஊடகங்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் வாயிலாக சமூக விழிப்புணர்வு கருத்துகளைக் கூறி வருவதன் மூலம் மிகவும் பிரபலமானது. குழந்தைகளுக்கு இலவச கல்வி ஊக்கத்தொகை, பெண்கள் முன்னேற்றத்தைக் கூறும் சாதனைப் பெண்கள் விருது, சாலையோரம்  பசித்திருக்கும்  ஏழை  மக்களுக்கு உணவு வழங்கும் விருந்தாளி திட்டம், மாற்றுத்  திறனாளிகளுக்கான  ரீச் தீ பீச்  திட்டம், போன்றவை ரெயின்ட்ராப்ஸ் அமைப்பின் நற்பணிகளுக்குச் சான்றுகளாகும். ரெயின்டிராப்ஸ் அமைப்பின்  நல்லெண்ணத் தூதராக, ஆஸ்கார் வென்ற இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின்  சகோதரியும் இசையமைப்பாளரும், தயாரிப்பாளருமான  ஏ.ஆர்.ரெஹானா உள்ளார்.

இந்த அமைப்பு தற்போது எட்டாவது முறையாக  ‘பெண் சாதனையாளர்களை கௌரவிக்கும்’ விழாவை நடத்தினர்.  இந்த விழா கடந்த 2012 ஆம் ஆண்டு முதல்  ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.  தேசிய மகளிர் தினத்தை பாராட்டி நடந்த  இந்த விழாவை,  ரெயின்டிராப்ஸ் அமைப்பின்  நல்லிணக்க தூதுவர்  ஏ.ஆர்.ரெஹானா தலைமை வகித்தார்,  அமைப்பின் நிறுவன தலைவர் அரவிந்த் ஜெயபால் முன்னிலை  வகித்தார்,.

 

இந்த வருடம், ரெயின்ட்ராப்ஸ் வாழ்நாள் சாதனையாளர் விருதினை 105 வயதான இயற்கை விவசாயி பாப்பம்மாள் மற்றும் 93-வயதான மூத்த சுதந்திர போராட்ட தியாகி லட்சுமி கிருஷ்ணன் பெற்றுக்கொண்டனர்.

 

சிறந்த ஆளுமைக்கான விருதினை இளம் வனதுறை அதிகாரி சுதா ராமன் ஐ.எப்.எஸ், சிறப்பு அங்கீகாரத்தை இந்தியாவின் முதல் திருநங்கை நீதிபதி ஜோயிதா மோண்டல், குயின் ஒப் தமிழ் சினிமா – சிறந்த நடிகைக்கான விருதினை ஊர்வசி, சிறந்த விளையாட்டு வீராங்கனைக்கான விருதினை இந்திய கூடைப்பந்து மகளிர் அணி கேப்டன் அனிதா பால்துரை, நம்பிக்கையிற்கான விருதினை சென்னை உயர்நீதிமன்ற முதல் பார்வை சவால் கொண்ட  வழக்கறிஞர் கற்பகம், சிறந்த இயற்கை விசாயிக்கான விருதினை திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பரிமளா தேவி, வீரத்திற்கான விருதினை சென்னை விமான நிலையத்தின் முதல் பெண் தீயணைப்பு வீரர் ரெம்யா ஸ்ரீகாந்தன்,  கருணைக்கான விருதினை டாக்டர் ரேணுகா ராமகிருஷ்ணன், இளம் விஞ்ஞானிக்கான விருதினை திருவண்ணாமலையை  சேர்ந்த 14 வயது சிறுமி  வினிஷா உமாசங்கர், இந்தியாவின் முதல் பெண் கனரக வாகன ஓட்டுநர் ஜோதிமணி கௌதமன், தமிழகத்தின் முதல் பெண் 108 ஓட்டுநர் வீரலட்சுமி,  இடுகாடுகளில் வெட்டியாள் வேலை செய்யும் கோவையை சேர்ந்த வைரமணி, பிரபல வீணை இசை கலைஞர் புண்யா ஸ்ரீனிவாஸ் உள்ளிட்ட பெண் சாதனையாளர்கள் ‘சாதனை பெண்கள் விருதுகளை’  பெற்றனர்.

 

பிரபல திரைப்பட இயக்குனரும் நடிகருமான பாக்கியராஜ், இயக்குனர் பி வாசு, காவல்துறை அதிகாரி சரவணன், விஜிபி குழுமத்தின் நிறுவனர் டாக்டர் வி. ஜி. சந்தோஷம், பாடகர் ஸ்ரீனிவாஸ், வீணை கலைஞர் ராஜேஷ் வைத்யா, வருமான வரித்துறை அதிகாரி நந்தகுமார் IRS,  இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், விஜிபி குழுமத்தின் இயக்குனர் ராஜாதாஸ், தணிக்கைக் குழு அதிகாரி லீலா மீனாட்சி, நடிகை நீலிமா  உள்ளிட்டோர் இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

ரெயின்ட்ராப்ஸ் அமைப்பின் நிறுவனத் தலைவர் அரவிந்த் ஜெயபால் இது குறித்துக் கூறுகையில், சர்வேதச மகளிர் தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் சாதனைப் பெண்கள் விருது விழாவை நடத்துவதில் எங்களுக்கு மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது. ஒவ்வொரு துறையிலும் இருக்கும் பெண் சாதனையாளார்களை அடையாளம்  கண்டு நாங்கள் விருது வழங்கி வருகிறோம்.  இந்த ஆண்டு கூடுதல் சிறப்பாக கொரோனா காலங்களில் அயராது மக்கள் சேவையாற்றிய பெண் முன்கள பணியாளர்களையும் இவ்விழாவில் கௌரவித்ததில் பெருமை அளிக்கிறது  என்றார்.

Must Read

spot_img