spot_img
HomeNewsகாடன் விமர்சனம்

காடன் விமர்சனம்

காட்டிலேயே தங்கி, யானைகளுக்கு பாதுகாப்பாகவும், பறவை மொழியில் காட்டுப்பறவைகளிடம் பேசிக்கொண்டும் அக்காட்டிலேயே வாழ்ந்து இயற்கையோடு ஒன்றி வாழ்கிறார் காடன்.வீரபாரதி என்கிற காடன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ராணா

Township உருவானால் யானைகளின் வாழ்வாதாரம் பாதிக்கும், யானைகள் அழிந்தால் காடுகள் அழியும், மழை குறையும், மண் வளம் பாதிக்கும் பின்னர் மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கும் என்பதற்காக அதனை தடுத்து நிறுத்த முற்படுகிறார் இந்த காடன். இதனை அறிந்த வனத்துறை அமைச்சர் தன்னுடைய குறுக்கு புத்தியை பயன்படுத்தி, காடனுக்கு மனநிலை பாதிக்கப்பட்டு விட்டதாக தன்னுடைய வக்கீல் மூலமாக நீதி மன்றத்தில் நிரூபித்து, மூன்று மாதம் சிறை தண்டனையும் வாங்கி கொடுத்து , சிறையில் சித்ரவதையும் செய்கிறார்.யானைகளின் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக உணவையும் தண்ணீரையும் தேடி அவை தினசரி 50 முதல் 100 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும் வழித்தடங்கள் வளர்ச்சி என்ற பெயரால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றன. ஆண்டுதோறும் யானைகள் ஆயிரக்கணக்கில் ஒன்று கூடுவதற்கும் இனப்பெருக்கம் செய்யவும் பயன்படுத்தும் வலசைப் பகுதிகளும் ஆக்ரமிக்கப்பட்டுவிடுவதால் அவை வேறு வழியின்றி உணவையும் தண்ணீரையும் தேடி ஊர்களை நோக்கிப் படை எடுக்கின்றனஅரசியல்வாதிகளிடம்காடன் காட்டை இழந்தாரா? என்பதுதான் இந்த காடன் படத்தின் மையக்கதை.

யானைகளின் இந்த வாழிடப் பிரச்சினை குறித்து காடன் கதாபாத்திரம் வழியாக வகுப்பு எடுக்கிறார் பிரபு சாலமன். 

 

Must Read

spot_img