spot_img
HomeNewsஅஜித்தாவது தெரியாமல் செய்தார்.. கமல் தெரிந்தே செய்தார் ; குமார சம்பவம் இயக்குனர் குமுறல்

அஜித்தாவது தெரியாமல் செய்தார்.. கமல் தெரிந்தே செய்தார் ; குமார சம்பவம் இயக்குனர் குமுறல்

அஜித்தாவது தெரியாமல் செய்தார்.. கமல் தெரிந்தே செய்தார் ; குமார சம்பவம் இயக்குனர் குமுறல்

பரதக்கலை விஷயத்தில் அஜித்தும் கமலும் தவறான முன்னுதாரணமாகி விட்டனர் ; இயக்குனர் சாய்ஸ்ரீராம் பகிரங்க குற்றச்சாட்டு

ஆண்கள் பரதம் கற்றுக்கொண்டால் பெண் தன்மை ஏற்படுமா..? ; முன்னணி ஹீரோக்களுக்கு குமார சம்பவம் இயக்குனர் சராமரி கேள்வி

சாய்ஸ்ரீராம் இயக்கத்தில் பரதத்தை மையப்படுத்தி உருவாகும் ‘குமார சம்பவம்’

ஆண்களிடம் கல்யாண பயத்தை ஏற்படுத்தி விட்டனர் அஜித்தும் கமலும் ; உண்மையை உடைக்கும் குமார் சம்பவம் இயக்குனர்  

முப்பது வருடங்களுக்கு மேலாக பரதக்கலையை தனது உயிர் மூச்சாக கொண்டு கலைச்சேவை செய்துவருபவர் இயக்குநர் கே.சாய்’ஸ்ரீராம். தற்போது முழுக்க முழுக்க பரதக்கலையை மையமாக வைத்து ‘குமார சம்பவம்’ என்ற படத்தை எடுத்து முடித்திருக்கிறார். இந்தப்படத்தில் கதை, திரைக்கதை, வசனம், இசை, பாடல்கள், நடனம், தயாரிப்பு, இயக்கம் என்பதோடு மட்டுமில்லாமல் அவரே கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். படத்தில் என்னோடு நிகிதா மேனன், சாய் அக்‌ஷிதா, மீனாட்சி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

வெஸ்டர்ன், ராப் என இளசுகள் கவனம் திரும்பி கிடக்க, இந்தசமயத்தில் பரதத்தை மையப்படுத்தி இந்தப்படத்தை உருவாக்க வேண்டிய அவசியம் என்ன என்பது குறித்து இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் தனது மனக்குமுறல்களை பகிர்ந்துகொண்டார் இயக்குநர் சாய்ஸ்ரீராம்..

“நான் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டியத்துறையில் இருக்கிறேன். என்னுடைய அப்பா பி.கே.முத்து பரதக்கலைஞராக இருந்தவர். ஏழைபடும்பாடு, சுதர்ஸன், மக்களைப் பெற்ற மகராசி, மாங்கல்யம் போன்ற படங்களில் டான்ஸ் மாஸ்டராக இருந்திருக்கிறார். சிவாஜிக்கு நாட்டியம் கற்றுக் கொடுத்திருக்கிறார். நானும் இதே துறைக்கு வந்து விட்டேன்.

கடந்த பல வருடங்களாகவே சினிமாவில் பரத நாட்டியத்தை மிகவும் மோசமாக சித்தரிக்கிறார்கள். குறிப்பாக ஆண்கள் பரதம் கற்றுக்கொண்டால் பெண் தன்மை வந்து விடும் என்ற தவறான ஒரு விஷயத்தை திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக ‘வரலாறு’ படத்தில், நாயகன் அஜித் பரதம் கற்றுக்கொண்டதால் தனக்கு திருமணம் ஆகவில்லை என ஒரு காரணம் சொல்வார்.

அதே போல ‘விஸ்வரூபம்’ படத்தில் நடிகர் கமல்ஹாசன் நாட்டியக்கலைஞராக இருப்பதால், குறிப்பாக பெண் தன்மை கொண்டவராக இருப்பதால், அவரது மனைவி அவரை புறக்கணிப்பதாக காட்டப்பட்டிருக்கும். நன்றாக பரதம் தெரிந்த ஜெயம் ரவியே கூட, டண்டணக்கா என்கிற பாடலில் அதை அவமதிக்கும் விதமாகத்தானே ஆடியிருந்தார்

பரதம் என்பது புனிதமான விஷயம். அதை இப்படியெல்லாம் சிறுமைப்படுத்துவது பற்றி யாருமே கவலைப் படவில்லை. என்னிடம் பரதம் கற்க விரும்புபவர்கள் எல்லாம் கேட்கும் முதல் கேள்வி, இதை கற்றுக்கொண்டால் நமக்கு பெண் தன்மை வந்துவிடுமா, திருமணத்திற்கு பெண் தர மாட்டார்களா என்கிற சந்தேகத்துடனேயே கேட்கிறார்கள்.. அந்தவகையில் இந்த விஷயத்தில் கமலும், அஜித்தும் பரதக்கலைக்கு துரோகம் செய்துவிட்டார்கள் என்றே சொல்வேன்.

இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாரிடம் இதுபற்றிய உண்மையையும் எனது மனக்குமுறலையும் வெளிப்படுத்தியபோது, அது அறியாமல் நடந்துவிட்ட தவறு என பெருந்தன்மையுடன் ஒப்புக்கொண்டார், அதேபோல நடிகர் அஜித்தாவது அதுபற்றி தெரியாமல் யாரோ சொல்லிக்கொடுத்ததை செய்தார் என்று வைத்துக்கொள்ளலாம்… ஆனால் கமல் பரதம் பற்றி எல்லாம் தெரிந்திருந்தும், ஆண் பரத கலைஞர்களை அவமதித்து விட்டார். அவர் ஜாம்பவான் என்பதற்காக தவறை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியுமா..?

இப்படி ஒவ்வொரு படத்திலும் பரதக்கலையையும் ஆண் பரத கலைஞர்களையும் தவறாக சித்தரிப்பதை இனியேனும் தடுக்க வேண்டும்.. அதேசமயம் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக போய் சொல்லிக்கொண்டிருக்க முடியாது என்பதால் தான், தற்போது பரதத்தை மையப்படுத்தி ‘குமார சம்பவம்’ என்ற படத்தை நானே எடுத்து முடித்திருக்கிறேன். இந்தப் படத்திற்குப் பிறகு பரதத்தை இனிமேல் யாரும் தவறாக காட்டக்கூடாது.. அதேபோல ஆண்கள் பரதம் கற்றுக்கொண்டால் பெண் தன்மை வந்துவிடும் என்கிற பொய்யான கருத்தும் இனி பரவக்கூடாது.. ஆண்களும் பரதம் கற்றுக்கொள்ள ஆர்வமாக முன் வரவேண்டும்…. அதுதான் என்னுடைய நோக்கம்” என கூறினார்.

இந்தப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றார் இயக்குனர் சாய்ஸ்ரீராம்.

Must Read

spot_img