spot_img
HomeNewsஅமேசான் ப்ரைம் வீடியோவில் பிரத்யேகமாக ஸ்ட்ரீமாகும் 5 படங்கள்

அமேசான் ப்ரைம் வீடியோவில் பிரத்யேகமாக ஸ்ட்ரீமாகும் 5 படங்கள்

ஜோஜி முதல் யுவரத்னா வரை.. இந்த விழாக்காலத்தில் அமேசான் ப்ரைம் வீடியோவில் பிரத்யேகமாக ஸ்ட்ரீமாகும் 5 படங்களை உங்களின் அன்பானவர்களுடன் கண்டு மகிழுங்கள்
அல்லது

தெற்கிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 5 முத்தான திரைப்படங்களுடன் அமேசான் ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு விழாக்கால வாழ்த்துகளை உரித்தாக்குகிறது

நாடு விழாக்கோலம் தரித்திருக்கிறது. பல்வேறு பிரதேசங்களிலும் புத்தாண்டு களைகட்டத் தொடங்கியிருக்கிறது. இந்த வார இறுதியையும் உள்ளடக்கி விழாக்கால விடுமுறை வரும் நிலையில் கூடவே கரோனா பெருந்தொற்றால் ஆங்காங்கே ஊரடங்கும் ஒட்டிக் கொண்டிருக்கிறது. வேறு வழியே இல்லாது நீங்கள் வீட்டில் தொலைக்காட்சியில் வழக்கமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியைப் பார்க்க வேண்டிய சூழலுக் உருவாகியிருக்கிறது. ஒருவேளை நீங்கள் வித்தியாசமாக ஏதாவது காண விரும்பினால், உங்களுக்காக அமேசான் ப்ரைம் அண்மையில் வெளியான 5 திரைப்படங்களைத் தேர்வு செய்து ஸ்ட்ரீம் செய்கிறது. அமேசான் ப்ரைமின் விழாக்கால வாழ்த்துகளுடன், உங்களின் அன்பானவர்களுடன் இத்திரைப்படங்களைக் கண்டு மகிழுங்கள்

ஜோஜி

‘சி யூ சூன்’ படத்தின் மூலம் ஓடிடி தளத்தில் தனது தடத்தைப் பதித்த பஹத் பாசில் தற்போது ‘ஜோஜி’ மூலம் மீண்டும் ஓடிடி தளத்துக்கு வந்திருக்கிறார். ‘ஜோஜி’, க்ரைம் ட்ராமா வகையைச் சேர்ந்த மலையாளத் திரைப்படம். இப்படத்தை திலீஷ் போத்தன் இயக்கியுள்ளார். படத்தில் பாபுராஜ், ஷமி திலகன், பாஸில் ஜோசப் ஆகியோர் நடித்துள்ளனர். நாடகத் தந்தை ஷேக்ஸ்பியரின் ‘மேக்பெத்’ நாடகத்தால் ஈர்க்கப்பட்டு இக்கத்தை உருவாக்கப்பட்டுள்ளது. மெய்சிலிர்க்க வைக்கும் ஒளிப்பதிவு, நாடி நரம்புகளை உறையவைக்கும் புதிர்கள் உங்களை இருக்கையின் நுணிக்கு அழைத்துவந்துவிடும் என்பதில் சந்தேகமில்லை. 2021 ஏப்ரல் 09ல் வெளியான இத்திரைப்படத்தை நீங்கள் பிரத்யேகமாக அமேசான் ப்ரைம் வீடியோவில் காணலாம்.

ட்ரெய்லர் லின்க் : https://www.youtube.com/watch?v=9yULZ8y1J-s

ஜதி ரத்னலு

ஒரு வேளை உங்களின் தெரிவு ஆனந்தக் கண்ணீர் சிந்தவைக்கும் பட வகையறாவைச் சேர்ந்தது என்று வைத்துக்கொள்வோம். அப்படியென்றால் நீங்கள், தெலுங்கு திரைப்படமான ‘ஜதி ரத்னலு’-வை தவறவிடாதீர்கள். நகைச்சுவையும், கதைவசனமும் உங்களை ஆர்ப்பரிக்க வைக்கும். அனுதீப் கே.வி. எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தில் நவீன் பொலிஷெட்டி, பிரியதர்ஷினி, ராகுல் ராமகிருஷ்ணா, ஃபரியா அப்துல்லா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படம் முழுவதுமே கேலி, கூத்துக்கு பஞ்சமிருக்காது. வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும் நிகழ்விலும் மகிழ்ச்சியைத் தேடும் மூன்று ஆண்களைப் பற்றிய கதைதான் இது. வாழ்க்கையை மனதுக்குப் பிடித்ததுபோல் மகிழ்ச்சியாக வாழ்ந்து பார்த்துவிட வேண்டும் என்ற இலக்குடன் நகரத்துக்கு வரும் இந்த இளைஞர்கள் செய்யாத குற்றத்துக்காக சிறைக்குச் செல்கின்றனர். அதன் பின் நிகழ்வது எல்லாமே சிரிப்பு சர வெடியாக வெடிக்க நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் வயிறு குலுங்க சிரித்து படத்தை ரசிப்பீர்கள்.

ட்ரெய்லர் லின்க்: https://www.youtube.com/watch?v=HXckl7c6cL4

யுவரத்னா:

சந்தோஷ் ஆனந்த்ராம் இயக்கியுள்ள கன்னட ஆக்‌ஷன் திரைப்படமான  ‘யுவரத்னா’-வில் புனீத் ராஜ்குமார், பிரகாஷ் ராஜ், சாயிஷா, சோனு கவுடா ஆகியோர் நடித்துள்ளனர். இந்தக் கதை புகழ்பெற்ற ஆர்.கே.பல்கலைக்கழகத்தைச் சுற்றி பிண்ணப்பட்டுள்ளது. இந்த பிரபல கல்வி நிலையம், கல்வித்துறை தனியார்மயமாக்கப்படுவதாலும், அரசியல் சதிகளாலும் மூடப்படும் நிலைக்கு வருகிறது. கல்லூரி முதல்வராக வரும் பிரகாஷ் ராஜூம், அவருக்கு உண்மையான மாணவராக இருக்கும் புனீத் ராஜ்குமாரும் (கதாபாத்திரத்தின் பெயர் அர்ஜூன்) எப்படியெல்லாம் அரசியல் சுழலில் பகடைக்காய்களாக சிக்கி மீண்டு வருகின்றனர் என்பதே கதைக்கரு.

ட்ரெய்லர் லின்க்: https://www.youtube.com/watch?v=a1L1EviALUg

தி ப்ரீஸ்ட்:

தி ப்ரீஸ்ட், மலையாளத் திரைப்படம். அமானுஷ்யங்கள் பற்றிய இத்திரைப்படம் நிச்சியமாக உங்களை பயத்தில் உறையவைக்கும். ஜோபின் டி சாக்கோ இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். மம்முட்டி, மஞ்சு வாரியர், நிக்கிலா விமல் ஆகியோர் நடித்துள்ள இத்திரைப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கதையம்சத்துக்காகவும், நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு புதிர்கள் நிரம்பிய திருப்பங்களுக்காகவும் படத்தை திரை விமர்சகர்கள் கொண்டாடித் தீர்த்துவிட்டனர். ஒரு பாதிரியாரின், அமானுஷ்ய திறமைதான் படத்தின் மையப்புள்ளி. அந்தத் திறமையுடன் அவர் கையிலெடுக்கும் ஒவ்வொரு பிரச்சினையுமே பல அவிழ்க்கமுடியாத முடிச்சுகளுடன் கூடிய மர்மப் பெட்டகம் போல் விரிகிறது.

ட்ரெய்லர் லின்க்: https://www.youtube.com/watch?v=ieHuz94ieRI

அன்பிற்கினியாள்:

அன்பிற்கினியாள், நிச்சயம் பார்க்கப்பட வேண்டிய தமிழ் த்ரில்லர் திரைப்படம். கீர்த்தி பாண்டியன், சி அருண்பாண்டியன், ப்ரவீன் ராஜா ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஒரு பெரிய மாலில் உள்ள குளிர்பதனக் கூடத்தில் சிக்கிக்கொள்ளும் ஒரு பெண்ணைச் சுற்றி இத்திரைப்படம் பிண்ணப்பட்டுள்ளது. அந்தப் பெண் தனது புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி சாவிலிருந்து தன்னை எப்படிக் காப்பாற்றிக் கொள்கிறார் என்பதை காட்சிக்கு காட்சி ஆச்சரியத்துடன் காட்டியிருக்கிறது இத்திரைப்படம்.

Must Read

spot_img