இதுவரை எந்த கதாநாயகனும் நடித்திராத கேரக்டர்
“மீண்டும்” படத்தில் உச்சகட்டம்!
அஜித்குமார் நடித்து மாபெரும்வெற்றி பெற்ற ” சிட்டிசன்”
படத்தை இயக்கியவர் சரவணன் சுப்பையா.
” கந்தர்வன்” “ஒன்பதிலிருந்து பத்துவரை ” உட்பட ஐந்து படங்களை தயாரித்தவர் மணிகண்டன். இவருடைய நிறுவனத்தின் பெயர் ஹீரோ சினிமாஸ்.
மணிகண்டன் மிகுந்த பொருட்செலவில் சரவணன் சுப்பையா இயக்கத்தில் தயாரித்துள்ள படம்தான் ” மீண்டும்”
மணிகண்டனை “மீண்டும்” படத்தில் கதிரவன் என பெயர் மாற்றி கதாநாயகனாக சரவணன் சுப்பையா அட்டகாசமாக நடிக்க வைத்துள்ளார்.
அனேகா கதாநாயகியாக நடித்துள்ள இதில் சரவணன் சுப்பையாவும் நடித்துள்ளார்.
தாய்நாட்டுக்கு எதிரான முக்கிய பிரச்சனை ஒன்றை
குற்றப்புலனாய்வு துறை ” பி” பிரிவு கதாநாயகன் கதிரவனிடம் ஒப்படைக்கிறது . தாய்நாட்டுப்பற்று அதிகம் உள்ள கதிரவன் இந்த உத்தரவை சவாலாக ஏற்று களம் இறங்குகிறார். கடமையை செய்ய செல்கிறார். இவர் வருகையை கண்டுபிடித்துவிட்ட எதிரிகள் அவரை பிடித்து தனிமைச் சிறையில் அடைத்து மிகக்கொடூரமான முறையில் சித்திரவதை செய்கின்றனர். சித்திரவதையின் உச்சகட்டமாக நடைபெறும் அந்த கொடூர சம்பவங்கள் அதிர்ச்சியின் உச்சம். , அந்த காட்சி இதுவரை ஆசிய திரைப்படங்களிலேயே வந்திராத காட்சிகள் என்றால் அது மிகையாகாது. அந்த காட்சிகளில் நாயகனான கதிரவன் துணிச்சலுடன் நடித்ததை இயக்குனர் உட்பட படக்குழுவினர் அனைவரும் கைதட்டி பாராட்டி வாழ்த்தினார்கள்.
தணிக்கை சான்றிதழ் பெற்றுள்ள ” மீண்டும்” திரைப்படம் ஊரடங்கு முடிந்தவுடன் திரையரங்குகளில் வருகிறதா? ஊரடங்கின் போதே ஓ.டி.டி. தளத்தில் வரப்போகிறதா? என்பதற்கான பேச்சு வார்த்தை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
எஸ்.எஸ். ஸ்டேன்லி, யார் கண்ணன், கேபிள் சங்கர், சுப்ரமணிய சிவா, பிரணவ்ராயன், “களவாணி” புகழ் துரைசுதாகர், சுபா பாண்டியன், இந்துமதிமணிகண்டன், மோனிஷா, அனுராதா நாகராஜன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
வைரமுத்துவின் பாடல்களுக்கு நரேன் பாலகுமார் இசையமைத்துள்ளார். சூப்பர் சுப்பராயன் சண்டைப் பயிற்சியையும், ராதிகா நடனப் பயிற்சியையும் அளித்துள்ளனர்.
தேசிய விருது பெற்ற ராஜாமுகமது படத்தொகுப்பையும், ஸ்ரீனிவாஸ் தேவாம்சம் ஒளிப்பதிவையும்,
நாகராஜ் தயாரிப்பு நிர்வாகத்தையும் கவனித்துள்ளனர்.
கதை, திரைக்கதை. வசனம், எழுதி இயக்கி உள்ளார் சரவணன்சுப்பையா.
ஹீரோ சினிமாஸ் நிறுவனம் சார்பில் சி.மணிகண்டன் தயாரித்துள்ளார்.