அல்லு சிரிஷ் அவரது அடுத்தப் படத்தின் ப்ரீ லுக்கை வெளியிட்டார். இந்தப் படத்தில் அல்லு சிரிஷுக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடிக்கிறார்.
ப்ரீ லுக் போஸ்டர் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இதற்காக அல்லு சிரிஷின் ரசிகர்கள் காத்திருந்ததால் எதிர்ப்பார்ப்பை ஈடு செய்த அந்தப் போஸ்டரை #Sirish6 என்ற ஹேஷ்டேக் மூலம் ட்விட்டரின் ட்ரெண்ட் செய்துவருகின்றனர். விஜேதா படப் புகழ் ராகேஷ் சசி இப்படத்தை இயக்கியிருக்கிறார். GA2 பிக்சர்ஸ் இத்திரைப்படத்தை தயாரிக்கிறது. படத்தை அல்லு அரவிந்த் வழங்குகிறார்.
ப்ரீ லுக் வெளியீட்டோடு ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டுத் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. மே 30ல், அல்லு சிரிஷின் பிறந்தநாளன்று ஃபர்ஸ்ட் லுக் வெளியாகிறது.
ரசிகர்களுக்கு விருந்துபடைக்கும் வகையில், ஃப்ர்ஸ்ட் லுக்குக்கு முன்னதாக இன்னொரு ப்ரீ லுக் போஸ்டரும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது டோலிவுட்டில் புதிய ட்ரெண்டை உருவாக்கியுள்ளது.
அல்லு சிரிஷின் ABCD திரைப்படம் வெளியாகி இரண்டாண்டுகள் ஆகிவிட்டது. கடைசியாக அல்லு சிரிஷ் இந்தியில் டான்ஸ் ஆல்பம் ஒன்றில் தோன்றினார் அந்த வீடியோ ரிலீஸான சில நாட்களிலேயே யூடியூபில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்தது.
தெலுங்கு, மலையாள மொழிகளில் அல்லு சிரிஷின் படங்களைப் பார்த்து ரசிகர்கள் அவர் மீது அளவற்ற எதிர்பார்ப்பை வைத்து புது வரவுக்காகக் காத்திருக்கின்றனர்
ப்ரீலுக் போஸ்டரை வெளியிட்டு அடுத்த படத்தை அறிவித்தார் அல்லு சிரிஷ்
ப்ரீலுக் போஸ்டரை வெளியிட்டு அடுத்த படத்தை அறிவித்தார் அல்லு சிரிஷ்