spot_img
HomeNewsநியூஸ் 7 தமிழின் “அன்பு பாலம்”

நியூஸ் 7 தமிழின் “அன்பு பாலம்”

“அன்பு பாலம்”

கொரோனா ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நியூஸ் 7 தமிழின் “அன்பு பாலம்” பூர்த்தி செய்து வருகிறது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உதவத் தயாராக இருப்போரைக் கண்டறிந்து, அவர்கள் அளிக்கும் உதவிகளை ஒருங்கிணைத்து உதவி தேவைப்படுவோருக்கு நேரடியாக அளிக்கும் செயல்பாடுகளை அன்பு பாலம் மேற்கொள்கிறது.

இதேபோல, முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதியளிக்க முன்வருவோரிடம் காசோலையைப் பெற்று அரசிடம் அளிக்கும் பணியையும் அன்பு பாலம் மேற்கொண்டு வருகிறது.

நெல்லை மாவட்டம் துத்திகுளத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்த மூன்று சிறுவர்களைப் பற்றி அன்பு பாலம் மூலம் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மூன்று சிறுவர்களின் கல்விக்கு நடவடிக்கை எடுப்பதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் உறுதியளித்ததோடு, சிறுவர்களின் பாட்டிக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளார். இந்நிகழ்ச்சியின் சிறப்பு தொகுப்பாக தினமும் இரவு 8:00 மணிக்கு நியூஸ்7தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த செயல்பாடுகளுக்கு மக்களிடையே மிகுந்த வரவேற்பை அளித்துள்ளது .

Must Read

spot_img