spot_img
HomeNewsரசிகர்களே தயாரகுங்கள் "ஜகமே தந்திரம்" புயல் உங்களை தாக்க வருகிறது !

ரசிகர்களே தயாரகுங்கள் “ஜகமே தந்திரம்” புயல் உங்களை தாக்க வருகிறது !

ரசிகர்களே தயாரகுங்கள் “ஜகமே தந்திரம்” புயல் உங்களை தாக்க வருகிறது !

Watch Trailer Here
Film Stills – Images
EPK Clips Featuring Karthik Subbaraj Here
Key Art

செவ்வாய்க்கிழமை 2021 ஜூன் 1 :
Netflix நிறுவனம், இன்று  தமிழின் மிகவும்  எதிர்பார்ப்புகுரிய படமான  “ஜகமே தந்திரம்” படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளது. ரசிகர்கள் அனைவரும் “ரகிட ரகிட ரகிட” என உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். தனது வாழ்வில், தனது இருப்பிடத்தை அடைய நன்மைக்கும் தீமைக்குமான போரில் பங்குகொள்ளும், லோக்கல் கேங்ஸ்டரின் மிகப்பெரிய பயணத்தை, பிரமாண்டமாக திரையில்   வடித்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். கேங்ஸ்டராக அனைவரின் மனம் கவர்ந்த நடிகர் தனுஷ் நடித்திருக்கிறார். இத்திரைப்படத்தை YNot Studios மற்றும் Reliance Entertainment நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. ஜகமே தந்திரம் திரைப்படம் உலகளவில் 2021 ஜூன் 18 அன்று வெளியாகிறது.

தமிழ் ரசிகர்களுக்கு கோடை காலத்தின், பெரும் கொண்டாட்டமாக வெளியாகும் இப்படத்தில் தனுஷ், , ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, கலையரசன், ஜோஜு ஜார்ஜ், சரத் ரவி மற்றும் ஜேம்ஸ் காஸ்மோ ஆகியோர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில், ரசிகர்களை இருக்கையில் கட்டிப்போடும் பரபர திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.

மிகவும்  எதிர்பார்ப்புகுரிய படமான  “ஜகமே தந்திரம்” திரைப்படம்  208 மில்லியன் சந்தாதாரர்கள் பார்க்கும் வகையில் Netflix தளத்தில் வெளியாகிறது. இப்படம் தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகிறது.

படம் குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூறியதாவது…

“ஜகமே தந்திரம்” எனது கனவு திரைப்படம். என் மனதிற்கு மிகவும் நெருக்கமான படம். மிக விறுவிறுப்பான வகையில், உலகின் தற்போது நடைமுறையில் இருக்கும், மிகமுக்கியமான பிரச்சனையை, உள்ளூரில் இருக்கும் ஒரு கதாப்பாத்திரத்தை வைத்து, மிக சுவாரஸ்யமாகவும் கொண்டாட்டத்துடனும்  உருவாக்கப்பட்ட திரைப்படம்.   ரசிகர்கள் தனுஷ் அவர்களின் அட்டகாசமான திறமையை, 190 நாடுகளில் Netflix தளத்தின் வழியே கொண்டாடலாம்.  YNot Studios மற்றும் Reliance Entertainment நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள “ஜகமே தந்திரம்” திரைப்படம் உலகளவில் 2021 ஜூன் 18 அன்று Netflix தளத்தில் வெளியாகிறது.

தனிப்பட்ட வகையில் தாக்குதல் நிகழும் போது,  அதன் வலி அதிகமாக இருக்கும் !

Netflix தளத்தில் 2021 ஜூன் 18 அன்று வெளியாகும்  “ஜகமே தந்திரம்”
படத்தை தவறவிடாதீர்கள் !

நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம் :

எழுத்து, இயக்கம் : கார்த்திக் சுப்புராஜ்

நடிகர்கள் : தனுஷ், ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, ஜோஷப் ஜோஜு ஜார்ஜ், கலையரசன், சரத் ரவி, ரோமன் ஃபியோரி,  சவுந்தர்ராஜா, துரை ராமசந்திரன், மாஸ்டர் அஷ்வத்

இசை : சந்தோஷ் நாராயணன்

ஒளிப்பதிவு : ஷ்ரேயாஸ் கிருஷ்ணா

படத்தொகுப்பு : விவேக் ஹர்ஷன்

Netflix நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம்

Netflix நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனமானது உலகில் முன்ணனி இணைய ஸ்ட்ரீமிங்க் தளமாகும். 208 மில்லியன் சந்தாதாரர்களுடன் உலகின் 190 நாடுகளில், பல்வேறு மொழிகளில், பலவிதமான வகைகளில் திரைப்படங்கள் இணைய தொடர்கள், டாக்குமென்ட்ரிகள்  ஆகியவற்றை வழங்கி வருகிறது. இதன் சந்தாதாரர்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், இணைய இணைப்பு இருந்தால் எவ்வளவு கதைகளை வேண்டுமானாலும் பார்க்க முடியும். சந்தாதாரர்கள் படததை  நிறுத்தி, ஃபார்வேட் செய்து,  எந்த விளம்பரங்கள் இல்லாமல் தங்கள் விருப்பப்படி பார்க்க முடியும்.

சமீபத்திய தகவல்கள், புதிய செய்திகளுக்கு IG @Netflix_IN, TW @NetflixIndia and FB @NetflixIndia சமூக வலைதளங்களில் இணைந்திருங்கள்.

YNOT Studios குறித்து
www.ynotstudios.in

YNOT Studios நிறுவனம் சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தயாரிப்பு நிறுவனம் ஆகும். 2009 ஆம் ஆண்டு இந்நிறுவனத்தை துவங்கிய தயாரிப்பாளர் S. சசிகாந்த் அவர்கள் 2021 வரை தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மொழிகளில் மொத்தமாக 18 திரைப்படங்களை தயாரித்துள்ளார். 2017 ஆம் ஆண்டு இயக்குநர்கள் புஷ்கர் & காயத்திரி இயக்கிய “விக்ரம் வேதா” திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. மேலும் இத்திரைப்படம் 3 மொழிகளில் ரீமேக் செய்யப்படவுள்ளது. இந்நிறுவனத்தின் தயாரிப்பாக சமீபத்தில் வெளியான , அரசியல் காமெடி படமான “மண்டேலா”  விமர்சக ரீதியிலும், மிகப்பெரும் வரவேற்பை பெற்று, வெற்றிபெற்றது. இந்நிறுவனத்தின் அடுத்த வெளியீடாக “ஜகமே தந்திரம்” Netflix தளத்தில் 2021 ஜூன் 18 அன்று வெளியாகிறது.
நிறுவனர் : S. சசிகாந்த் @sash041075
YNotStudios Twitter & Instagram – @studiosynot

Must Read

spot_img