spot_img
HomeNewsஅனபெல் சேதுபதி - விமர்சனம்

அனபெல் சேதுபதி – விமர்சனம்

படம் சுவாரஸ்யமாகவே துவங்குகிறது. பேய்களும் அறிமுகமாகின்றன. பேயாக வருபவர்களில் பலர் நகைச்சுவை நட்சத்திரங்கள் என்பதால், ஒரு மிகப் பெரிய நகைச்சுவை கலாட்டா நிச்சயம் என்ற உணர்வு ஏற்படுகிறது.

இந்தியா சுதந்திரமடைவதற்கு முன்பாகக் கட்டப்பட்ட ஒரு பெரிய அரண்மனை. அந்த அரண்மனையில் ஏகப்பட்ட பேய்கள் வசிக்கின்றன. அங்கு பௌர்ணமி தினத்தன்று யார் தங்கினாலும் இறந்து, அவர்களும் ஆவியாகிவிடுவார்கள். அந்த அரண்மனையில் கதாநாயகியும் அவளது குடும்பமும் வந்து தங்குகிறார்கள். அங்கே வசிக்கும் பேய்கள் ஏன் வெளியேற முடியவில்லை, அந்த அரண்மனையின் பின்னால் உள்ள மர்மம் என்ன என்பதுதான் ‘அனபெல் சேதுபதி’ படத்தின் கதை.

படத்தின் பிற்பாதியில் விஜய் சேதுபதி அறிமுகமாகிறார். எல்லாப் படங்களைப் போலவும் இந்தப் படத்திலும் அலட்சியமாகவே வந்துபோகிறார்

பேயையும் நகைச்சுவையையும் கலந்து Horror – Comedy என்ற பாணியில் வெளிவந்த பல திரைப்படங்கள் தமிழில் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கின்றன. அந்த பாணியில் வெளிவந்திருக்கும் ஒரு படம்தான் ‘அனபெல் சேதுபதி’.

Must Read

spot_img