‘ஆறாம் நிலம்’, இலங்கையில் தற்போது வசித்துவரும் ஈழத் தமிழர்களின் தொடர்ச்சியான துயரங்களையும் என்றைக்கும் ஆறாத ரணங்களின் மீது குத்திப் பார்க்கும் தற்காலச் சூழ்நிலையை எடுத்துக் காட்டுகிறது.
முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் தமிழரின் பிணக் குவியலுக்கு நடுவே.. குண்டு மழைக்கு தப்பித்த தமிழர்கள் ஆயிரக் கணக்கில் சிங்கள இராணுவத்தினரிடம் சரணடைந்தனர். ஆனால், சரணடைந்தவர்களோ கூட இன்று ‘காணமல் ஆக்கப்பட்டோர்’ பட்டியலில் எங்கிருக்கிறார்கள்; எப்படியிருக்கிறார்கள், இந்த 12 ஆண்டுகளில் அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா என்று கூற மறுக்கும் சிங்கள அரசாங்கம் ‘காணாமல் போனோர் இனி திரும்பி வரமாட்டார்கள்’ என்று சொல்வதை நெற்றிப் பொட்டில் அடிதார்போல் சொல்லியிருக்கிறது சரணடைந்தவர்களையும் கைது செய்யப்பட்டவர்களையும் ‘காணாமல் போனோர்’ என்றழைப்பதும் அதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக, உறவுகளைத் தொலைத்தவர்கள் அவர்கள் வருவார்கள் என்கிற நம்பிக்கையுடன் போராடி வருவதும் ஈழத்தில் தொடரும் பெருந்துயரம். உலக மக்களின் ரட்சகன் என்று சொல்லிக்கொள்ளும் ஐநாவின் பார்வைக்கு இந்த விடயம் கொண்டு போகப்பட்டும் அது சர்வதேச சமூகத்திடம் எடுபடவிடமால் செய்யப்படுவதில் ஈழத் தமிழ்ச் சமூகமும் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களும் பெரும் வலியைச் சுமந்து நிற்கிறது.
சொந்த நிலத்தில், செல்லடிக்கப்பட்டு சிதிலமாகி, குட்டிச் சுவராக கிடக்கும் மச்சு வீட்டுக்கு முன்பாக குடிசை போட்டு வாழும் அவலம் ஒருபுறம், சொந்த மண்ணில் வாழமுடியாமல் புலம்பெயர்ந்து வாழும் அவலம் மறுபுறம் என ஈழத்தமிழரின் தொடர் வாழ்வைப் பேசும் இந்தத் திரைப்படத்தில், காணாமல் அடிக்கப்பட்ட கணவன் வருவான் என்று நம்பிக் காத்திருக்கும் ஓர் இளம் தாயையும் தன்னுடைய தகப்பன் வந்துவிடுவான் என எதிர்பார்த்திருக்கும் 12 வயது இளம் சிறுமியையும் அவளுடைய அப்பம்மாவையும் சுற்றும் உண்மைகளையே சம்பவங்களாக்கி திரைக்கதை எழுதியிருக்கிறார் இயக்குநர்.
‘இறுதிப் போர்’ என்ற அந்த சொல்லாக்கம், ‘இனி இலங்கை மண்ணில் தமிழர்களுக்கு போரின் வலிகளே கிடையாது’ என்பதுபோன்ற புனைவை உருவாக்குறது. ஆனால், ஐபிசி தமிழ் ஊடகத்தின் தயாரிப்பில் அனந்த ரமணன் இயக்கியிருக்கும் ‘ஆறாம் நிலம்’,