spot_img
HomeNewsநடிகர் வித்யுத் ஜாம்வால் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'சனக்' படத்தின் முன்னோட்டம் வெளியீடு.

நடிகர் வித்யுத் ஜாம்வால் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘சனக்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு.

நடிகர் வித்யுத் ஜாம்வால் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘சனக்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு.

பாலிவுட் நடிகர் வித்யுத் ஜாம்வால் நடித்திருக்கும் ‘சனக்’ படத்தின் டிரைலர் வெளியீடு

டிஸ்னி + ஹாட்ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் ‘சனக்’ படத்தின் டிரைலர் வெளியீடு

அக்டோபர் 15-ஆம் தேதியன்று வெளியாகிறது ‘சனக்’

நடிகர் வித்யுத் ஜாம்வால் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘சனக்’ படத்தின் டிரைலர் இன்று வெளியானது. பணயக் கைதியை மையப்படுத்திய இப்படம் டிஸ்னி + ஹாட்ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் அக்டோபர் 15ஆம் தேதியன்று பிரத்யேகமாக வெளியாகிறது.

உலகின் மிகப்பெரிய அதிரடி ஆக்சன் ஹீரோக்களில் ஒருவரான வித்யூத் ஜாம்வால் கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘சனக்’. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் இன்று வெளியானது.

ஹிந்தி திரை உலகில் பணய கைதியை மையப்படுத்திய திரைப்படங்களை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் விபுல் அம்ருத்லால் ஷா, ஜீ ஸ்டுடியோஸ் என்னும் நிறுவனத்துடன் இணைந்து ‘சனக்- ஹோப் அண்டர் சீஜ்’  திரைப்படத்தை மிக பிரம்மாண்டமான ஆக்சன் என்டர்டெய்னர் படமாக உருவாக்கி இருக்கிறார்.

இப்படத்தின் சண்டைக் காட்சிகள் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தி, வியப்பை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. பணயக் கைதியின் திக் திக் நிமிடங்கள், இந்த படத்தின் முன்னோட்டத்தில் இடம்பெற்றிருக்கிறது. ரசிகர்களை இருக்கையின் விளிம்பில் வரவைக்கும் வகையில் டிரைலர் அமைந்திருக்கிறது.

கனிஷ்க் வர்மா இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் வித்யூத் ஜாம்வால், பெங்காலி திரைஉலக சூப்பர் ஸ்டார் நடிகை ருக்மணி மைத்ரா, நடிகை நேகா துபியா மற்றும் சந்தன ராய் சான்யல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ‌

இப்படத்தின் டிரைலர், பார்வையாளர்களுக்கு முழுநீள அதிரடி ஆக்சன் காட்சிகள், விழிகள் அகலமாக விரியும் வகையில் அமைந்திருக்கிறது. அதிக ஆபத்தான சூழ்நிலையில் இருக்கும் தனது நேசத்துக்குரியவரை காப்பாற்ற படத்தின் நாயகன் போராடும் காட்சிகள், பார்வையாளர்களை உறைய வைத்து விடும். நடிகை ருக்மணி மைத்ரா இப்படத்தின் மூலம் ஹிந்தி திரை உலகிற்கு நாயகியாக அறிமுகமாகிறார். இவரும் படத்தின் நாயகன் வித்யூத் ஜாம்வாலுக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி, பார்வையாளர்களிடையே ஆரவாரமான வரவேற்பை பெறும். ஆக்சன் திரில்லர் ஜானரில் ‘சனக்’ திரைப்படம் இருந்தாலும், இப்படத்தின் முன்னோட்டத்தில் இவ்விருவருக்கும் இடையேயான காதலும் பார்வையாளர்களின் மனதை இதமாக வருடும். இது கதையுடன் ஒருங்கிணைந்திருப்பதும் கூடுதல் சிறப்பு.

நடிகர் வித்யூத் ஜாம்வால் பேசுகையில்,”இந்த திரைப்படம் கோவிட்-19  பெருந்தொற்று காலகட்டத்தில் படமாக்கப்பட்டது. அனைவரையும் போல நாங்களும் இப்படத்தின் பணிகளுக்காக சென்றோம். இப்படத்திற்காக கடுமையாக உழைத்து, பணிகளை நிறைவு செய்தோம். நீங்கள் படத்தை பார்க்கும் போது உங்களை பற்றிய படைப்பாகவும், உங்களை சுற்றியுள்ள மக்களுக்கு உதவி செய்திடும் உத்வேகத்தையும் அளிக்கும் என நான் உறுதியாக கூறுகிறேன்” என்றார்.

தயாரிப்பாளர் விபுல் அம்ருத் லால் ஷா பேசுகையில்,”இந்திய அளவிலான பார்வையாளர்களுக்கு ‘சனக்’ திரைப்படத்தை வெளியிடுவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த திரைப்படம் பணயக் கைதியை பற்றிய கதையை ஆழமாகவும், விரிவாகவும் எடுத்துச் சொல்லாமல், வித்தியாசமான முறையில் மேற்கொள்ளப்பட்ட அற்புதமான முயற்சி. ” என்றார்.

வித்யூத் ஜாம்வால், சந்தன் ராய் சான்யல், நேகா துபியா இவர்களுடன் பெங்காலி சூப்பர் ஸ்டார் நடிகை ருக்மணி மைத்ரா நடித்திருக்கும் ‘சனக் – ஹோப் அண்டர் சீஜ்’,  ஜீ ஸ்டுடியோஸ், சன்ஷைன் பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் உடன் இணைந்து வழங்குகிறது. இந்த திரைப்படம் அக்டோபர் 15 தேதியன்று டிஸ்னி + ஹாட்ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது. விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில், கனிஷ்க் வர்மா இயக்கி இருக்கிறார்

Must Read

spot_img