spot_img
HomeNewsஅழகானதொரு படத்தில் மீண்டும் கிராமத்து பாத்திரத்தில் நடிப்பது மகிழ்ச்சி !, “அன்பறிவு” குறித்து நடிகர் நெப்போலியன்!

அழகானதொரு படத்தில் மீண்டும் கிராமத்து பாத்திரத்தில் நடிப்பது மகிழ்ச்சி !, “அன்பறிவு” குறித்து நடிகர் நெப்போலியன்!

 

 

தமிழ் நாட்டின் ஒவ்வொரு குடும்பத்திலும் தங்கள் சொந்த உறவாக ஏற்றுக்கொள்ளும் பாக்கியம் ஒரு சில  நடிகர்களுக்கே உண்டு. நடிகர் நெப்போலியன் பல ஆண்டுகளாக இந்த பாக்கியத்தை அனுபவித்து வருகிறார், மேலும் ஹிப்ஹாப் ஆதி நடித்த “அன்பறிவு” படத்தில் வலுவானதொரு  கிராமப்புற கதாப்பாத்திரத்தில், அவர் மீண்டும் வந்திருப்பது, படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜனவரி 7, 2022 அன்று Disney Plus Hotstar  தளத்தில் இப்படம் வெளியாகிறது.

படம் குறித்து நடிகர் நெப்போலியன் கூறியதாவது…
இயக்குநர் அஸ்வின் ராம் என்னை இந்த கதை  மூலம் அணுகியபோது, படத்தின் திரைக்கதை மற்றும் கதாப்பாத்திரம் இரண்டுமே எனக்கு மிகவும் பிடித்துபோனது. இந்தப் படத்தின் படப்பிடிப்பிற்காக நான் அமெரிக்காவில் இருந்து சென்னை பறந்து வந்தேன். இத்துறையில் நீண்ட வருடங்கள் பயணித்து கொண்டிருப்பதால், திரைக்கதையை விவரிப்பதில் சிறந்து விளங்கும் திரைப்பட இயக்குநர்கள் பலரை நான் சந்தித்திருக்கிறேன், ஆனால் அவர்களின் காட்சியமைப்பில்,  படத்தை உருவாக்கியபின் திரையில் இறுதிப்பதிப்பை  பார்த்தால், சொன்ன கதையைப் போல் ஈர்க்கக்கூடியதாக இருக்காது. ஆனால் , இயக்குனர் அஸ்வின் ராம் அந்த விசயத்தில்  ஒரு திறமையான திரைப்பட இயக்குநர் என நிரூபித்துவிட்டார். கதையை விவரித்த விதத்தை விட அவர் எடுத்திருந்த விதம் இன்னும் அருமையாக இருந்தது. இப்படத்தில்  பிடிவாத குணம் கொண்ட முனியாண்டி எனும் கிராமத்து  பாத்திரத்தில் நடித்துள்ளேன். அன்பறிவு உருவான விதம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியை  அளித்தது. சத்யஜோதி பிலிம்ஸ் ஒரு அழகான குடும்ப பொழுதுபோக்கு அழகாக படத்தை உருவாக்கியுள்ளது, இது Disney Plus Hotstar போன்ற உலகின் மிகபிரமாண்ட நிறுவனத்தின் மூலம் ஒவ்வொரு வீட்டு திரையிலும் வெளியாவது மகிழ்ச்சி. நடிகர் ஹிப் ஹாப் ஆதி ஒரு பன்முகக் கலைஞர். இளைஞர்கள் இணைந்த  குழுவுடன் பணிபுரிந்தது எனது மனதையும் உடலையும் புத்துணர்ச்சியாக வைத்திருந்தது. இந்தப் படத்தில் என்னையும் ஒரு அங்கமாக்கியதற்காக ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

‘அன்பறிவு’ திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் T.G. தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தை G சரவணன் மற்றும் சாய் சித்தார்த் இணை தயாரிப்பு செய்துள்ளனர். இயக்குநர் அஷ்வின் ராம் இயக்கியுள்ள இப்படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி முதன்மை வேடத்தில் நடிக்க, ஷிவானி ராஜசேகர் மற்றும் காஷ்மீரா நாயகிகளாக நடித்துள்ளனர். நெப்போலியன், சாய்குமார், ஆஷா சரத் ஆகியோருடன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

 

Must Read

spot_img