தமிழ் சினிமாவில் மென்மையான மற்றும் வித்தியாசமான வேடங்களில் நடித்ததன் மூலம் தனக்கென தனித்ததொரு பெயர் பெற்ற நடிகர் விதார்த், ஹிப் ஹாப் ஆதி நடித்துள்ள “அன்பறிவு” படத்தில் மிக வித்தியாசமான களத்தில் வில்லனாக கால்பதித்துள்ளார். இயக்குநர் அஷ்வின் ராம் எழுதி இயக்கியுள்ள இப்படம், ஜனவரி 7, 2022 முதல் Disney Plus Hotstar தளத்தில் உலகளவில் பிரத்யேகமாக வெளியாகிறது.
படம் குறித்து நடிகர் விதார்த் கூறியதாவது.., இந்தப்படத்தின் ஆரம்ப கட்டத்தில், இயக்குநர் அஷ்வின் ராம் என்னை எதிர்மறையான கதாபாத்திரத்தில் எப்படி கற்பனை செய்தார் என்று நான் கொஞ்சம் ஆச்சரியப்பட்டேன். நான் இதுவரை பணியாற்றிய பெரும்பாலான கமர்ஷியல் மற்றும் கலை படங்களில், எனது கதாபாத்திரங்கள் பெரும்பாலும் மென்மையானவையாகவே இருக்கும். இருப்பினும், அஷ்வின் திரைக்கதையை விவரித்தபோது, இந்த பாத்திரம் எனது திறனை வேறு பரிமாணத்தில் காட்ட உதவும் என்று நான் நம்பினேன். இது இயக்குனர் அஸ்வின் மீதான ஆழ்ந்த அல்லது குருட்டுத்தனமான நம்பிக்கை என்றே சொல்லலாம். அவர் என் கதாபாத்திரத்தில் என்ன வேண்டினாரோ, அதை என் முழு அர்ப்பணிப்பை தந்து நிறைவேற்றினேன். விஷுவல் ப்ரோமோக்களில் என்னுடைய ஸ்க்ரீன் பிரசன்ஸ் மற்றும் மேனரிஸங்களுக்கு கிடைத்த பெரும் வரவேற்பைப் பார்த்தபோது, மிகவும் மகிழச்சியாக இருந்தது. ஒரு கதாப்பாத்திரத்தை உருவாக்கி, அதற்கு சரியான நடிகரை தேர்வு செய்து, அவரை வைத்து அப்பாத்திரத்தை முழுமையாக காட்சிப்படுத்தும்போது தான் ஒரு இயக்குனர் வெற்றி பெறுகிறார். அந்த வகையில், தமிழ் சினிமாவுக்கு அழகான திரைப்படங்களை வழங்கப் போகும் திறமையான திரைப்படத் இயக்குநராக அஷ்வின் கிடைத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அன்பறிவு படத்தில் பணியாற்றுவது மிகவும் அசாதாரண அனுபவமாக இருந்தது, ஏனெனில் அதில் நெப்போலியன் சார், ஆஷா சரத் மேடம் போன்ற அனுபவம் வாய்ந்த நட்சத்திரங்கள் மற்றும் இளைஞர்கள் இருந்தனர். ஹிப்ஹாப் ஆதி மிகவும் சிறந்த மனிதர். அதிக உயரங்களை எட்டிய போதிலும், அவர் மிகவும் இயல்பாக இருக்கிறார். சூழ்நிலையை வெல்ல எப்போதும் தந்திரமான முறைகளை நம்பும் பசுபதி எனும் கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன். இந்த கதாப்பாத்திரம் பொதுமக்களிடம் தூய்மையையும், நேர்மையையும் வெளிப்படுத்துவதாக இருக்கும், ஆனால் கிராம மக்களிடையே சச்சரவு மற்றும் மோதலை உருவாக்குவதற்கு மூல காரணமாக இருக்கும். அன்பறிவு ஒரு சிறந்த குடும்ப பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்று என்னால் நம்பிக்கையுடன் சொல்ல முடியும், பார்வையாளர்கள் தங்கள் வீட்டில் அமர்ந்து நிறைவானதொரு படத்தை பார்க்கலாம் பார்க்க முடியும்.
‘அன்பறிவு’ திரைப்படத்தை இயக்குநர் அஷ்வின் ராம் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி முதன்மை வேடத்தில் நடிக்க, ஷிவானி ராஜசேகர் மற்றும் காஷ்மீரா நாயகிகளாக நடித்துள்ளனர். நெப்போலியன், சாய்குமார், ஆஷா சரத் ஆகியோருடன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த குடும்ப பொழுதுபோக்கு திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் T.G. தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தை G சரவணன் மற்றும் சாய் சித்தார்த் இணை தயாரிப்பு செய்துள்ளனர்.