காவல்துறையில் சேரவேண்டும் என்று கனவோடு இருக்கும் கதாநாயகன் ஐடிஐ படிப்பு முடித்து இருக்கிறார்.வித்தார்த்துக்கு கனவில் வருகிற விஷயங்கள் நிஜத்திலேயே நடந்து வருகிறது. இதனால் வித்தார்த் வியந்து பயந்து போகிறார். அப்போது ஒரு நாள் கனவில் வித்தார்த் தான் வேலைக்கு சென்று முதல் மாத சம்பளம் வாங்குகிறார். சம்பளம் வாங்கும் சமயத்தில் அவரின் தந்தைக்கு விபத்தில் ஏற்படுவது போல தோன்றுகிறது. பின் வித்தார்த் தடுக்க முயற்சிப்பதற்குள் அந்த விபத்து நடந்து விடுகிறது. உடனே வித்தார்த் விழித்து பார்க்கிறார். இது கனவு என்று உணர்கிறார். இந்த மாதிரி தினம் தினம் கனவில் வருவது நிஜத்தில் ஏன் நடக்கிறது என்று புரியாமல் குழப்பத்தில் இருக்கிறார் ஹீரோ. தன் தந்தைக்கு நிகழ்வது விபத்தல்ல ஒரு கொலை முயற்சி என்று விதார்த்துக்கு புரிகிறது.இந்த கொலையை நிகழ்த்த காரணம் என்ன? கொலையாளிகளை கதாநாயகன் வித்தார்த் பிடித்தாரா? ஆசைப்பட்ட கனவு வேலைக்கு சென்றாரா? என்பதே படத்தின் மீதி கதை. அறிமுக இயக்குனர் ஆர்.சீனிவாசன் திரைக்கதை மூலம் இவர் எந்த இடத்திலும் புது பட இயக்குனர் என்று சொல்லும்படியாக இல்லாமல் அழகாக கொண்டு சென்றிருக்கிறார். ஒரு புதுவிதமான முயற்சியை இயக்குனர் கையாண்டிருக்கிறார் இந்த படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். விவேகானந்த் சந்தோஷ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.