spot_img
HomeNewsஎந்த அரசியலை பேச போகிறது  ‘’பப்ளிக்’’ திரைப்படம்.

எந்த அரசியலை பேச போகிறது  ‘’பப்ளிக்’’ திரைப்படம்.

எந்த அரசியலை பேச போகிறது  ‘’பப்ளிக்’’ திரைப்படம்.

கே.கே.ஆர் சினிமாஸ் தயாரிக்க, ரா.பரமன் இயக்கத்தில்  சமுத்திரக்கனி,  காளி வெங்கட், ரித்திகா ஆகியோர் நடிக்கும் திரைப்படம் ‘பப்ளிக்’.விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் போஸ்டர்கள், ஸ்னீக்பீக்கள்  கவனத்தை ஈர்த்து வருவதுடன். இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த நிலையில் ஸ்னீக்பீக் -3 வெளியாகியுள்ளது.

சிங்காரவேலர், ரெட்டைமலை சீனிவாசன்,அயோத்திதாச பண்டிதர், நடேசனார், கக்கன், சத்தியமூர்த்தி, பாரதிதாசன், இளையபெருமாள், பட்டுகோட்டைஅழகிரி, ஜீவா, நெடுஞ்செழியன், மூக்கையாதேவர், ராமமூர்த்தி, அன்னிபெசன்ட் அம்மையார், காயிதேமில்லத் படங்களை வைத்து வெளியிட்ட பாஸ்ட் லுக்  போஸ்டர்  பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் பெரியார் படம் புறக்கணிக்கப்பட்டது குறித்து பெரும் விவாதம் எழுந்தது.

சமுக ஊடகத்தில் இது குறித்து பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து இருந்தனர்.இது குறித்து படத்தின் இயக்குனர் பரமன் கொடுத்த பேட்டி பலரின் பாராட்டையும் பெற்றது.

https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/763362-public-tamil-movie-director-raa-paraman-exclusive-interview.html

அதற்கு அடுத்து வெளி வந்த ஸ்னீக்பீக் -1 ல் மாடே மாடே என்று மாட்டை வைத்து பெட்ரோல் டீசல் விலை உயர்வை நக்கல் செய்யும் காட்சி புதுமையான ,நையாண்டி தனமாகவும்,அதே நேரத்தில் அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இருந்தது.

https://www.youtube.com/watch?v=In1hLectB7w

அடுத்தாக வெளி வந்த ஸ்னீக்பீக் -2 போஸ்டரில் பெரியார், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரைப்போல வேட மிட்டவர்கள், ஒரு டீ கடை அருகில் அமர்ந்திருப்பதைப் போன்ற போஸ்டரும் கவனத்தை ஈர்த்தது.

ஸ்னீக்பீக் -2 வீடியோவில் அரசியல் தலைவர் ஒருவர், தமிழே அறியாத ஒரு பெண்ணுக்கு தனது கட்சிப் பெயரை சொல்லித்தருவது போலவும், ‘கட்சி பெயரே சொல்ல வரலை.. எப்படி சீட் வாங்கித் தருவது’ என்று கேட்பது போலவும் ஒரு sneak பீக் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது

https://youtu.be/g5-SbDHJGYg

அதை தொடந்து தற்போது வெளியாகியுள்ள sneak peak-3 போஸ்டரில் எம்.ஜி.ஆர் படம், அதிமுக கொடி போன்று வரையபட்ட சுவத்துக்கு கீழே ரித்திகா சோகமாக உட்காந்து இருப்பது போன்று போஸ்டர் வெளியிட பட்டு உள்ளது. எம்.ஜி.ஆர் அதிமுக கொடி என்று இந்த போஸ்டரில் உள்ள குறியீடுகளை பார்க்கும் போது அடுத்த  தர்மயுத்தமா என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

Sneak peak 3 வீடியோவில் திருக்குறள் எழுதுனது திருவள்ளுவரா என்று இலக்கிய அணி பொறுப்புக்கு வரும் ஒருவர் கேட்கும் வீடியோ வெளியாகி உள்ளது. இது அரசியல் இன்றைய அரசியல் நிலையை காட்டுவது போல் அமைந்து உள்ளது. பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

https://www.youtube.com/watch?v=IEPCzHRhV1w

வித்தியாசமான போஸ்டர்கள்,sneak peak மூலம் கவனம் பெற்று வரும் பப்ளிக் படம். என்ன சொல்ல வருகிறது. எந்த அரசியலை பேச போகிறது  என்கிற எதிர்பார்ப்பை எகிற செய்து உள்ளது.

Must Read

spot_img