spot_img
HomeNews‘கௌன் பிரவின் தாம்பே?’  

‘கௌன் பிரவின் தாம்பே?’  

ஷ்ரேயாஸ் தல்பேட் நடிக்கும்  ‘கௌன் பிரவின் தம்பே?’ ( KAUN PRAVIN TAMBE? ) வாழ்க்கை வரலாற்று திரைப்படம்  டிஸ்னி+ ஹாட் ஸ்டார், FOX STAR STUDIOS,FRIDAY FILMWORKS மற்றும் BOOTROOM SPORTS PRODUCTION நிறுவனங்களின் தயாரிப்பில், ஜெயப்பிரத் தேசாய் இயக்கத்தில் டிஸ்னி+ ஹாட் ஸ்டார்  தளத்தில் ஏப்ரல் 1, 2022, இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.

இந்திய கிரிக்கெட் வீரர் பிரவின் தாம்பேவின் அதிகாரப்பூர்வ வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘கௌன் பிரவின் தாம்பே?’  படத்தில் மூத்த முன்ணனி நடிகர் ஷ்ரேயாஸ் தல்படே முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார். கண்களில் கனவுகளுடன் விளையாட்டின் மீதான தனது காதலை நிரூபிக்க அவரது அயராத விடாமுயற்சியின் பயணம்.  41 வயதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடத் தொடங்கிய லெக் ஸ்பின்னரின் வாழ்க்கை மற்றும் அவரது வியத்தகு வரலாற்று சாதனை பற்றிய ஒரு தனித்துவமான தன்னம்பிக்கை தரும், இதயத்தை கவரும் திரைப்படம்,  கிரிக்கெட்டைப் போலவே வேடிக்கையானது, சவாலானது மற்றும் சிலிர்ப்பை தரக்கூடியது. பிரமாண்ட படமாக உருவாகியிருக்கும் இப்படத்தில் ஆஷிஷ் வித்யார்த்தி, பரம்பிரதா சாட்டர்ஜி மற்றும் அஞ்சலி பாட்டீல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

பிரவின் தாம்பே கேரக்டரில் நடித்துள்ள நடிகர் ஷ்ரேயாஸ் தல்படே கூறியதாவது…
இக்பால் படத்தில் நாயகனாக நடித்து 17 வருடங்கள் கழித்து, திரையில் பிரவினாக நடித்ததை மிகவும் பெருமையாக உணர்கிறேன். இந்தப் பாத்திரமும் கதையும் எனக்கு வாழ்நாளில் மிகச்சிறப்பானதொரு வாய்ப்பை வழங்கியது, படப்பிடிப்பின் ஒவ்வொரு நிமிடத்தையும் நான் மிகவும் ரசித்தேன், பிரவீன் கதாப்பாத்திரத்தை சரியாக செய்வதற்கு மிகுந்த அர்ப்பணிப்பு மற்றும் பெரும் முயற்சி தேவைப்பட்டது. இக்கதாப்பத்திரத்திற்காக அவருடன் இணைந்து பழகியது என்றென்றும் என் வாழ்வின் மிக அழகான தருணங்களாக இருக்கும், எங்கள் அனைவரின் உழைப்பில்  இப்படம் அழகாக வந்துள்ளது என்றார்.

Previous article
Next article
காதலின் வலிமையை இசையால் உணர்த்தும் ‘அமோர்’ ‘அமோர்’ சிங்கிள் ஆல்பம் வெளியீடு சுயாதீன பாடலாக வெளியாகும் ‘அமோர்’ சுயாதீன இசை கலைஞர்கள் பிரணவ் ஆதித்யா மற்றும் சஞ்சய் பிரசாத் ஆகியோரின் இசையில் உருவான ‘அமோர்’ எனும் வீடியோ இசை ஆல்பத்தை திரையிசை உலகின் முன்னணி இசையமைப்பாளர்களான அனிரூத் மற்றும் ஜிப்ரான் இன்று வெளியிட்டனர். சரிகம நிறுவனத்திற்காக பி ரெடி பிலிம்ஸ் சார்பில் டோங்லி ஜம்போ தயாரித்திருக்கும் வீடியோ இசை ஆல்பம் ‘அமோர்’. இந்த வீடியோ இசை ஆல்பத்தில், சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தில் அனிரூத்துடன் பாடிய இசைக்கலைஞர் ஆதித்யா ஆர். கே. மற்றும் நடிகை ஆலியா ஹயாத் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். சஞ்சய் பிரசாத்தின் இளமை ததும்பும் வரிகளை நாயகனாக நடித்திருக்கும் ஆதித்யா ஆர்.கே சொந்தக்குரலில் பாடியிருக்கிறார். சங்கர்ராஜா மற்றும் எஸ். நவீன் குமார் ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். இதனை எஸ் பி என் சத்திய நாராயணன் இயக்கியிருக்கிறார். ‘அமோர்’ வீடியோ இசை ஆல்பம் குறித்து இயக்குநர் எஸ் பி என். சத்யநாராயணன் பேசுகையில், ” ‌இளைஞர்களின் கனவு உலகத்தில் எப்பொழுதும் காதல் பற்றிய சிந்தனை சிறகடித்துக் கொண்டே இருக்கும். ‘அமோர்’ என்றால் காதல். இந்த இசை ஆல்பத்தில் காதலன் காதலியை சந்தித்து தன் காதலை ஏற்றுக் கொள்ளும்படி தெரிவிக்கிறான். நாயகனின் காதலை ஏற்றுக் கொண்ட காதலி, அவனுடைய நேர்த்தியான நேர்மையால், பேரன்பு கொண்டு, காதலனை தன்னுடைய உடைமையாக கருதுகிறாள். இதனால் காதலர்களிடையே பிரிவு ஏற்படுகிறது. அதன்பின் அவர்கள் காதலின் வலிமையால் மீண்டும் இணைந்தார்களா? இல்லையா? என்பதை இனிமையான இசையின் பின்னணியில், அழகான காட்சிகளின் ஊடே சொல்லி இருக்கிறோம். காதலைப் பற்றிய எங்களது கற்பனை படைப்பை பார்வையாளர்களிடத்திலும், ரசிகர்களிடத்திலும் சென்றடைய செய்த சரிகம நிறுவனத்தின் அனந்தராமன் மற்றும் சிவபாலன் ஆகியோருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார். இதனிடையே இந்த வீடியோ இசை ஆல்பத்தை தயாரித்திருக்கும் பி ரெடி பிலிம்ஸ் நிறுவனம், தொடர்ந்து வீடியோ இசை ஆல்பங்களை தயாரித்து வெளியிடுவதிலும், ஆதித்யா ஆர்.கே போன்ற இசை கலைஞர்களையும், பின்னணி பாடகர்களையும் நடிகர்களாக வீடியோ இசை ஆல்பத்தில் அறிமுகப்படுத்துவதையும் இலக்காகக் கொண்டு இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Must Read

spot_img