ரசிகர்கள், விமர்சகர்களின் பாராட்டு மழையில், நடிகர் ஆதி பினிஷெட்டி நடிப்பில் “கிளாப்” !
ஆதி நடிப்பில் சோனி லைவ் தளத்தில் வெளியாகியிருக்கும் “கிளாப்” திரைப்படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடம் பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறது.
இது குறித்து Big Print Pictures தயாரிப்பாளர் IB கார்த்திகேயன் கூறியதாவது…,
இப்படத்திற்கு கிடைத்து வரும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் எங்கள் குழுவினரை பெருமளவில் உற்சாகப்படுத்தியுள்ளது. இப்படத்தின் கருவின் மீது நாங்கள் கொண்டிருந்த நம்பிக்கை, இந்த கோவிட் காலத்திலும், எங்கள் குழுவினரின் அயராத அர்ப்பணிப்பு மிக்க உழைப்பு, எங்களுக்கு மிகச்சிறப்பான வெற்றியை தந்துள்ளது. இப்போது, விமர்சகர்கள் மற்றும் பொது பார்வையாளர்கள் என அனைவரும் எங்கள் முயற்சிகளை அங்கீகரிப்பதையும், பாராட்டுவதையும் காண மிக மகிழ்ச்சியாக உள்ளது. நடிகர் ஆதி பினிஷெட்டி இப்படத்தில் காட்டிய ஆர்வத்திற்கும், அவரது அற்புதமான உழைப்பிற்கும் நன்றி. ஆகான்ஷா சிங், க்ரிஷா குருப், பிரகாஷ் ராஜ் சார், நாசர் சார், மைம் கோபி, முனிஷ்காந்த் மற்றும் படத்தில் பணிபுரிந்த அனைவரும் தங்களின் முழு பங்களிப்பை தந்து, சிறப்பான படமாக இப்படத்தை தந்துள்ளனர். இசைஞானி இளையராஜா சாரின் இசை, கிளாப் படத்திற்கு உயிர்ப்பை தந்து, ஒரு மாயாஜாலத்தை நிகழ்த்தியுள்ளது. அவரின் பாடல்களும் BGM களும் படத்திற்கு பெரும் அழகு சேர்த்துள்ளது. அனைத்து டெக்னீஷியன்களும் தங்களின் முழு அர்ப்பணிப்பை தந்துள்ளனர். இயக்குநர்
பிருத்வி ஆதித்யா ஒரு முழுமையான படைப்பை தந்ததில், தன்னை மிகச்சிறந்த இயக்குநராக நிரூபித்துள்ளார்.
ஒவ்வொரு காட்சியிலும், ரசிகர்கள் மிகச்சிறிய விவரங்களைக் கூட பாராட்டுவதைப் காண மிக மகிழ்ச்சியாக உள்ளது. படத்தைப் பற்றி இவ்வளவு நேர்மறையான பாராட்டுக்களை பொழிந்ததற்காக விமர்சகர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் நன்றி. இது நல்ல உள்ளடக்கம் சார்ந்த திரைப்படங்களை உருவாக்க எங்களுக்கு பெரும் நம்பிக்கையை தந்துள்ளது, இந்த பாராட்டுக்கள் தொழில்துறையில் உள்ள இளம் மற்றும் ஆர்வமுள்ள திறமையாளர்களை ஊக்குவிக்கிறது.
இயக்குநர் பிருத்வி ஆதித்யா எழுதி இயக்கியுள்ள இப்படம் தற்போது சோனி லைவ் தளத்தில் ஒளிபரப்பாகிறது. Big Print Pictures சார்பில் IB கார்த்திகேயன் இப்படத்தை தயாரித்துள்ளார். P பிரபா பிரேம், மனோஜ் & ஹர்ஷா இணைந்து தயாரித்துள்ளன