spot_img
HomeNews“தசரா”  படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் சிறு முன்னோட்ட காணொளி வெளியாகியுள்ளது

“தசரா”  படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் சிறு முன்னோட்ட காணொளி வெளியாகியுள்ளது

நானி, ஶ்ரீகாந்த் ஒடெலா, SLVC உடைய புதுமையான படைப்பான  “தசரா”  படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் சிறு முன்னோட்ட காணொளி வெளியாகியுள்ளது.

நேச்சுரல் ஸ்டார் நானி தொடர்ந்து வித்தியாசமான களங்களில், தரமான வகையிலான படங்களை மட்டுமே தற்போது  செய்து வருகிறார். அந்த வகையில் நேர்த்தியான ஆக்சன் மற்றும் மாஸ் கலந்த பொழுதுபோக்கு திரைப்படமாக ‘தசரா’ அறிமுக இயக்குநர் ஶ்ரீகாந்த ஒடெலா இயக்கத்தில் உருவாகி வருகிறது. இத்திரைப்படம் நடிகர் நானியின் முதல் பன்மொழி இந்திய திரைப்படமாக தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகிறது.

ஶ்ரீ லக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்  சுதாகர் செருகுரி  மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்ட படைப்பாக இப்படத்தை தயாரித்து வருகிறார். தேசிய விருது வென்ற நாயகி கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் முன்னோட்ட காட்சித்துணுக்கு சமீபத்தில் வெளியானது. போஸ்டரில் நடிகர் நானி லுங்கியுடன் கரடுமுரடான தோற்றத்தில் தோன்றியுள்ளார். அவரது இந்த தோற்றம் பெரும் ஆவலை தூண்டுவதாக அமைந்துள்ளது.

முன்னோட்ட காட்சி துணுக்கில், நடிகர் நானி தனது கூட்டத்துடன் சிங்கரேணி சுரங்க பகுதியில் நடந்து வருகிறார். அவரது வித்தியாசமான முரட்டு தோற்றம் நம்மை மிரட்டும் விதத்தில் அமைந்துள்ளது. மேலும் சந்தோஷ் நாராயணனின் பின்ணனி இசை இக்காட்சிக்கு வலுவூட்டுவதாக அமைந்துள்ளது.

கோதாவரிகானியில் உள்ள சிங்கரேணி நிலக்கரி சுரங்கத்தில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் நடக்கும் உணர்ச்சிகரமான கதையில், நானி மாஸ் மற்றும் ஆக்சன் கலந்த அதிரடியான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஒரு அழுத்தமான டிராமா திரைப்படமாக உருவாகும்  ‘தசரா’ திரைப்படத்தின் முன்னோட்ட காட்சி துணுக்கு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

சத்யன் சூரியன் ISC ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி, சாய் குமார் மற்றும் ஜரீனா வஹாப் ஆகியோர் முக்கியமான பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இப்படத்தில் நவின் நூலி எடிட்டராகவும், அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், விஜய் சாகந்தி நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள்.

நடிகர்கள் : நானி, கீர்த்தி சுரேஷ், சமுத்திரகனி, சாய் குமார், ஜரீனா வஹாப் மற்றும் பலர்.

தொழில்நுட்பக் குழு:

இயக்கம் – ஸ்ரீகாந்த் ஒடெலா
தயாரிப்பு –  சுதாகர் செருக்குரி
தயாரிப்பு நிறுவனம் – ஸ்ரீ லக்‌ஷ்மி  வெங்கடேஸ்வரா சினிமாஸ்
ஒளிப்பதிவு –  சத்யன் சூரியன் ISC
இசை – சந்தோஷ் நாராயணன்
எடிட்டர் – நவின் நூலி
தயாரிப்பு வடிவமைப்பாளர் – அவினாஷ் கொல்லா
நிர்வாகத் தயாரிப்பாளர் – விஜய் சாகந்தி
மக்கள் தொடர்பு –  சதீஷ் (AIM) – Tamil வம்சி-சேகர் – Telugu

Must Read

spot_img