spot_img
HomeNewsபுதிய பொழுபோக்கு நட்பு சித்திரத்தின் படப்பிடிப்பு, சென்னையில் துவங்கியது !

புதிய பொழுபோக்கு நட்பு சித்திரத்தின் படப்பிடிப்பு, சென்னையில் துவங்கியது !

The Mapogos Company & Trending Entertainment வழங்கும்,
சதீஷ்-சுரேஷ் ரவி (காவல்துறை உங்கள் நண்பன் புகழ்) நடிக்கும்,
புதிய பொழுபோக்கு நட்பு சித்திரத்தின் படப்பிடிப்பு, சென்னையில் துவங்கியது !

மிகச்சிறந்த கதைக்களம் கொண்ட படங்களில் நடிக்கும் போது, அதன் நாயகர்கள் மிக எளிதில் மக்கள் மனதில்  இடம் பிடித்து விடுகிறார்கள். காவல்துறை உங்கள் நண்பன் படபுகழ் நடிகர்கள் சதீஷ் மற்றும் சுரேஷ் ரவி ஆகியோருக்கு இது மிகவும் சிறப்பாக அமைந்தது, அவர்கள் அந்த திரைப்படத்தில் அவர்களின் பாத்திரங்களில் தங்கள் மகத்தான நடிப்பை வழங்கி பாராட்டை குவித்தனர். தற்போது இயக்குநர்  பிரவீன் சரவணன் இயக்கத்தில்  நட்பை மையமாக வைத்து உருவாகும் ஒரு புதிய படத்தில், இரட்டை ஹீரோக்களாக இந்த நண்பர்கள் இணைந்து நடிக்கவுள்ளார்கள். இப்படத்தினை The Mapogos Company & Trending Entertainment நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (மே 6, 2022) காலை தொடங்கியது, முழு படப்பிடிப்பும், சென்னையில் நடைபெறவுள்ளது. பிரவீன் சரவணன் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர், இவர் ஒளிப்பதிவாளர் சரவணனின் கீழ் பணிபுரிந்துள்ளார், மேலும் இயக்குநர் பாலாஜி மோகனிடம்  மாரி 2 படத்தில் இணை இயக்குனராகவும் இருந்துள்ளார். இப்படத்திற்கு விஷ்ணுஸ்ரீ KS (ஜாம்பி படம் புகழ்) ஒளிப்பதிவு செய்கிறார் மற்றும் தினேஷ் பொன்ராஜ் (களத்தில் சந்திப்போம்) படத்தொகுப்பு செய்கின்றார்.

இப்படத்தில் மோனிகா சின்னகோட்லா மற்றும் மானசா சவுத்ரி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். கருணாகரன், ஐஸ்வர்யா தத்தா & புகழ் மற்றும் பல முன்ணனி நட்சத்திர  நடிகர்கள் இப்படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.

Must Read

spot_img