spot_img
HomeNewsசுந்தர்சி ,ஜெய் ஜெய் நடித்துள்ள பட்டாம்பூச்சி படத்தில் இருந்து வெளியான முதல் பாடல் !!

சுந்தர்சி ,ஜெய் ஜெய் நடித்துள்ள பட்டாம்பூச்சி படத்தில் இருந்து வெளியான முதல் பாடல் !!

சுந்தர்சி ,ஜெய் ஜெய் நடித்துள்ள பட்டாம்பூச்சி படத்தில் இருந்து வெளியான முதல் பாடல் !!

பட்டாம்பூச்சி 1980களில் நடக்கும் சைக்கோ திரில்லர் கதை. அவ்னி டெலி மீடியா சார்பாக திருமதி. குஷ்பூ சுந்தர் தயாரிக்க சுந்தர்சி கதாநாயகனாகவும், முதன்முறையாக ஜெய் வில்லனாகவும் நடித்துள்ள படம் இது . ஹனி ரோஸ், இமான் அண்ணாச்சி, பேபி மானஸ்வி மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் பத்ரி.  கிருஷ்ணசுவாமி ஒளிப்பதிவு செய்ய நவநீத் சுந்தர் இசைஅமைகிறார் . எடிட்டிங் பணிகளை பென்னிஆலிவர் மேற்கொள்கிறார் . ,சண்டைப்பயிற்சி ராஜசேகர்,திரைக்கதை நரு. நாராயணன், மகா கீர்த்தி. சமீபத்தில் இந்த படத்தில் இருந்து வெளியாகிய டீஸர் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தில் இருந்து பட்டாம்பூச்சி எனும் முதல் பாடல் வெளியாகியுள்ளது .

நவநீத் சுந்தர் இசையமைத்துள்ள இப்பாடலுக்கு முகுந்தன் ராமன் பாடல்வரிகளை எழுதியுள்ளார் .பாடகர் சிவம் இந்த பாடலை பாடியுள்ளார் .

பாடல் வரிகள் :

Verse 1:
இருட்டு நெஞ்சுக்குள்ள நீரடிக்க…
தெறிச்ச நீரில் ரத்த வாட சொட்ட…
ருசிச்சு பாத்த நாக்கு இன்னும் கேக்க…
பயந்து திக்கு திக்கு சத்தம் கேக்க…

சுருட்டுக்குள்ள உள்ள பொடிய போல
கெடச்ச ஆளடிச்சு சிறுக, சிறுக
நெறிச்சு பத்த வச்சு பொகய விட்டு
ரசிச்சு பாத்திருப்பான் கதற விட்டு…

Chorus:
பட்டாம்பூச்சி…
இது பட்டு இல்ல வெட்டுக்கத்தி…
பட்டாம்பூச்சி…
இது காயும் புண்ணில் பாயும் ஈட்டி…
பட்டாம்பூச்சி…
இது கலரு இல்ல ரத்தக் களறி
பட்டாம்பூச்சி…

Verse 2:
முரட்டு மாட்ட நின்னு ஓட விட்டு…
வெரட்டி கட்டி வெக்கும் சல்லிகட்டு…
புடிக்கும் வீரனுக்கு ரத்தமெல்லாம்…
பதக்கமாகி தொங்கும் நாளிருக்கு…

தனிச்சி நின்ன காட்டு யான ஒன்ன…
வெலங்கு போட்டு உள்ள கட்டி வெக்க…
தெரிஞ்ச ஆளு இங்க வந்திருக்கு…
குறுக்க பாற போல நின்னிருக்கு…

Chorus:
பட்டாம்பூச்சி…
இவன் காரசார காவக்காரன்…
பட்டாம்பூச்சி…
உன் ஆதி அந்தம் பாத்த வீரன்…
பட்டாம்பூச்சி…
நீ மோதி பாத்து பாதி ஆவ
பட்டாம்பூச்சி…

Bridge:

தான் சொல்லி வச்சு
கொன்னதெல்லாம்
கெத்தாகி போதையாக…
காட்டாறுக்குள்ள பூனை என்ன
யானைக்கும் பேதமில்ல…

சிறகுல சிறை இல்ல
பறவ போகும் காத்துல
பறவைக்கு குறியெல்லாம்
தரையிலுள்ள இரையில
பசிக்குற பொழுதுல
மாட்டியாகும் வலையில…

ஓஹோஹோ…

Chorus:
பட்டாம்பூச்சி…
இது பட்டு இல்ல வெட்டுக்கத்தி…
பட்டாம்பூச்சி…
இது காயும் புண்ணில் பாயும் ஈட்டி…
பட்டாம்பூச்சி…
இது கலரு இல்ல ரத்தக் களறி
பட்டாம்பூச்சி…

நடிகர்கள் – சுந்தர் சி , ஜெய், ஹனி ரோஸ், இமான் அண்ணாச்சி, பேபி மானஸ்வி மற்றும் பலர்

தொழில்நுட்ப கலைஞர்கள் :

எழுத்து – இயக்கம் – பத்ரி
தயாரிப்பு  – அவனி டெலி மீடியா -. குஷ்பூ சுந்தர்
ஒளிப்பதிவு -கிருஷ்ணசுவாமி ,
இசை -நவநீத் சுந்தர்,
எடிட்டிங் – பென்னிஆலிவர் ,
சண்டைப்பயிற்சி ராஜசேகர்,
திரைக்கதை -நரு. நாராயணன், மகா கீர்த்தி
மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அஹ்மத்

Must Read

spot_img