spot_img
HomeNewsதி வாரியர்’ படத்தின் முதல் டீசர்

தி வாரியர்’ படத்தின் முதல் டீசர்

உஸ்தாத் ராம் பொத்தினேனி ‘தி வாரியர்’ படத்தின் முதல் டீசருடன், ரசிகர்கள் மனதை கொள்ளை கொள்ள வருகிறார் !

தி வாரியர் படத்தின் தயாரிப்பாளர்கள் படம் பற்றிய எதிர்பார்ப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளனர்.  ராம் பொதினேனி மற்றும் N லிங்குசாமியின் அற்புதமான கூட்டணியில் உருவான டிரெய்லர் படத்தின் மீதான ஆவலை பன்மடங்காக  உயர்த்தியுள்ளது.

ராம் பொத்தினேனியின் பிறந்த நாளான
மே 15 ஆம் தேதியை கொண்டாடும் விதமாக, ரசிகர்களுக்கு “தி வாரியர்” படக்குழு வழங்கும், மிகச்சிறந்த  பிறந்தநாள் பரிசாக இது அமைந்துள்ளது.

ராம் பொத்தினேனி போலீஸ் அவதாரத்தில் மிரட்டுகிறார், அதே சமயம் பின்னணியில் ரெடின் கிங்ஸ்லியின் பாத்திரம் வலிமைமிக்க சத்யா ஐபிஎஸ் பாத்திரத்தின்  சஸ்பென்ஸை உயர்த்துவதாக அமைந்துள்ளது. ராம் பொதினேனி போலீஸ் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு முற்றிலுமாக மாறியிருக்கிறார். அவர் இப்படத்தில் தமிழில் சொந்தமாக டப்பிங் செய்துள்ளார் & டிரெய்லரில் தமிழில் அவரது மாஸ் டயலாக் டெலிவரியை, தமிழ் பார்வையாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஆதி பினுஷெட்டி டீசரில் தனது முரட்டுத்தனமான தோற்றத்தால்  அனைவரையும் கவர்கிறார். விசில் மகாலட்சுமியாக  ‘கீர்த்தி ஷெட்டி’ வழக்கம் போல் தனது எனர்ஜியால் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறார். ராக்ஸ்டார் டிஎஸ்பியின் அட்டகாசமான பின்னணி இசை, ராம் பொத்தினேனியை போலீஸ் சத்யாவாக வேறு நிலைக்கு உயர்த்துகிறது.

டீசரில் ஒளிப்பதிவாளர் சுஜித் வாசுதேவ் உடைய அற்புதமான காட்சிகளும், விஜய்’ & அன்பறிவு  சண்டைக் கலைஞர்களின் அட்ரினலின் பம்ப் ஆக்‌ஷனும் இடம்பெற்றுள்ளன. சமூக விரோதிகளை எதிர்கொள்வதற்காக  போலீஸ் தனது அதிரடியான பாதையில் செல்வதை டீஸர் காட்டுகிறது. வாரியர் குழு உஸ்தாத் RAPO ரசிகர்களுக்கு வார இறுதி விருந்தளித்துள்ளது.

ராம் பொத்தினேனி நடித்த வாரியர் பல காரணங்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் படங்களில் ஒன்றாகும். ஏனெனில், இளம் தெலுங்கு நடிகர் முதன்முறையாக பிரபல இயக்குனர் N.லிங்குசாமியுடன் ஜோடி சேர்ந்துள்ளார், மேலும் இந்த படம், இருமொழிகளில் உருவாவதால், கோலிவுட்டில் ராமின் அறிமுக படமாக இருக்கும்.

மேலும், ஆதி பினுஷெட்டி இதுவரை திரையில் கண்டிராத வலுவான வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். இயக்குநர் லிங்குசாமி ஆக்‌ஷன் என்டர்டெய்னர்களுக்கு பெயர் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க (அவரது பெயர் விசில் மகாலட்சுமி) அவருடன் பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் உள்ளது குறிப்பிடதக்கது.

தி வாரியர் படத்தை மிகப்பெரும் பட்ஜெட்டில் Srinivasaa Silver Screen பேனரில் ஶ்ரீனிவாசா சிட்தூரி   தயாரிக்கிறார். பவன்குமார் இப்படத்தை வழங்குகிறார்.

 
 
 

Must Read

spot_img