spot_img
HomeNews” 'சாணி காயிதம்’  வெற்றி குறித்து செல்வராகவன், கீர்த்தி சுரேஷ்

” ‘சாணி காயிதம்’  வெற்றி குறித்து செல்வராகவன், கீர்த்தி சுரேஷ்

இதயத்தை விட்டு என்றும் நீங்காத படம்” ‘சாணி காயிதம்’  வெற்றி குறித்து செல்வராகவன், கீர்த்தி சுரேஷ்

அருண் மாதேஸ்வரனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ’சாணி காயிதம்’ படம் சமீபத்தில் அமேசான் பிரைம் வீடியோவில் மே 6 அன்று வெளியிடப்பட்டது,
பழிவாங்கும் அதிரடி ஆக்‌ஷன் படமான அது ஒவ்வொரு சினிமா ரசிகரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கடினமான கதையாகவும், புத்திசாலித்தனமான மற்றும் மெய்சிலிர்க்க வைக்கும் சினிமாவாகவும் இருப்பது போக, அனைவருக்கும் பிடித்த கீர்த்தி சுரேஷ் மற்றும் புகழ்பெற்ற இயக்குனர் செல்வராகவன் ஆகியோரின் வித்தியாசமான நடிப்புக்காகவும் படம் மிகவும் சிலாகிக்கப்பட்டது.

’சாணிகாயிதம்’படம் தொடங்கப்பட்டதில் இருந்தே, ரசிகர்களும் சமூக வலைதளவாசிகளும் செல்வராகவனையும் கீர்த்தி சுரேஷையும் போற்றிப் புகழ்ந்து கொண்டாடிக்கொண்டிருந்தது ஒரு ஆச்சர்யமான நிகழ்வு என்றுதான் சொல்லவேண்டும். அதிலும் குறிப்பாக சங்கையாவாக வாழ்ந்த இயக்குநர் செல்வராகவனின் பாத்திரச் சித்தரிப்பை பலரும் வியந்து பாராட்டியது குறிப்பிடத்தக்கது..இன்னொரு பக்கம் பொன்னி பாத்திரத்தில் மிகச்சரியாகப் பொருந்திய கீர்த்தி சுரேஷ் இன்னொரு முறை தேசிய விருது வாங்கும் அளவுக்கான நடிப்பை வழங்கியிருக்கிறார் என்பதையும் நிச்சயமாகச் சொல்லலாம்.

இப்படத்துக்குக் கிடைத்த அமோக வரவேற்பு மற்றும் பாசிட்டிவ் விமர்சனங்களுக்கு பதிலளித்த நடிகர் செல்வராகவன், “சாணி காயிதம் மூலம் நடிகராக எனது பயணத்தை தொடங்கியதில் உள்ளபடியே மகிழ்ச்சி அடைகிறேன். நான் நடித்த பாத்திரம் ஒரு ஆற்றல் வாய்ந்தது மற்றும் என்றென்றும் என்னுடன் இருக்கும். இந்தப் புத்திசாலித்தனமான படத்திற்காக என்னைப் பெற வலியுறுத்திய என் இயக்குனர் அருண் மாதேஸ்வரனுக்கும், இந்த தலைசிறந்த படைப்பை உருவாக்கிய அபாரமான குழுவுக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடமிருந்து வரும் அன்பு மற்றும் பாராட்டுக்காக நான் பெருமைப்படுகிறேன்.” என்கிறார்.

படத்தின் வெற்றி குறித்து கீர்த்தி சுரேஷ் கூறும்போது, “உலகம் முழுவதும் உள்ள எனது ரசிகர்கள் மற்றும் சகாக்களால் ’சாணி காயிதம்’ விரும்பப்பட்டு ரசிக்கப்படுவதற்கு நன்றியுடன் தலைவணங்குகிறேன். ஒரு நடிகருக்கு பார்வையாளர்களின் பாராட்டுகளை விட மகிழ்ச்சி தருவது வேறு எதுவும் இல்லை. இந்த பொன்னி பாத்திரத்துக்கு நான் பொருந்தி வருவேனா என்கிற சந்தேகம் எனக்கு இருந்தது. ஆனால் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் என் மீது வைத்திருந்த நம்பிக்கையுடன் அந்தப் பாத்திரமாகவே என்னால் மாற முடிந்ததில் மகிழ்ச்சி.. என் இதயத்தை விட்டு எப்போதும் நீங்காத  இப்படத்தின்  ஒரு பகுதியாக இருந்ததற்காக ஒட்டுமொத்த குழுவிற்கும் எனது சக நடிகர் செல்வா சாருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்கிறார்.

ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பேனரின் கீழ் தயாரிக்கப்பட்டு, எழுத்தாளர்-இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், யாமினி யக்ஞமூர்த்தி ஒளிப்பதிவாளராக, சாம் சிஎஸ் இசையமைப்பாளராக, ராமு தங்கராஜ் கலை இயக்குநராக, நாகூரன் ராமச்சந்திரன் எடிட்டராக  ஸ்டண்ட்ஸ் இயக்குநராக திலிப் சுப்பராயன் மற்றும் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக சித்தார்த் ராவிபட்டி ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

சாணி காயிதம் பிரைம் வீடியோவில் 240 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் பிரத்யேகமாக திரையிடப்பட்டது. இப்படம் தெலுங்கில் சின்னி என்ற பெயரிலும் மலையாளத்தில் சாணி காயிதம்  என்ற இதே பெயரிலும் காணக்கிடைக்கிறது.

Must Read

spot_img