spot_img
HomeNewsநடிகர் ஆர்.கே. சுரேஷ் நடிக்கும் 'ஒயிட் ரோஸ்' பட தொடக்க விழா

நடிகர் ஆர்.கே. சுரேஷ் நடிக்கும் ‘ஒயிட் ரோஸ்’ பட தொடக்க விழா

நடிகர் ஆர்.கே. சுரேஷ் நடிக்கும் ‘ஒயிட் ரோஸ்’ பட தொடக்க விழா
 
பூஜையுடன் தொடங்கிய ஆர்.கே சுரேஷின் ‘ஒயிட் ரோஸ்’
 
ஆர்.கே. சுரேஷ் தயாரித்து, நடிக்கும் புதிய திரைப்படம் ‘ஒயிட் ரோஸ்’
நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே. சுரேஷ் கதையின் நாயகனாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு, ‘ஒயிட் ரோஸ்’ என பெயரிடப்பட்டு, அதன் தொடக்க விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
அறிமுக இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் ‘ஒயிட் ரோஸ்’. இதில் ஆர்.கே. சுரேஷ் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் தயாரிப்பாளர் ரூஸோ, மற்றொரு கதாநாயகனாக அறிமுகமாகிறார். நடிகை ‘கயல்’ ஆனந்தி ஆர். கே. சுரேசிற்கு ஜோடியாக நடிக்கிறார். என். எஸ். உதயகுமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு, ஜோஹன் ஷிவனேஷ் இசையமைக்கிறார். கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுத, கோபிகிருஷ்ணா படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். கலை இயக்கத்தை டி. என். கபிலன் கவனிக்க, சண்டைப் பயிற்சியை பிரபு அமைக்கிறார். சைக்கோ திரில்லர் ஜானரில் தயாராகும் இந்த ‘ஒயிட் ரோஸ்’ திரைப்படத்தை ஸ்டூடியோ 9 பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். கே .சுரேஷ், தயாரிப்பாளர் எஸ். ரூஸோவுடன் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார். இதன் தொடக்க விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, நடிகர் ஆரி உட்பட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்,“ அரசு மருத்துவமனைகளில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி, சைக்கோ திரில்லர் பாணியில் விறுவிறுப்பான திரைக்கதையாக ‘ஒயிட் ரோஸ்’ உருவாகியிருக்கிறது.” என்றார்.
‘விசித்திரன்’ திரைப்படத்தின் மூலம் சிறந்த நடிகர் என்ற அடையாளத்தையும், அங்கீகாரத்தையும் பெற்றிருக்கும் ஆர். கே. சுரேஷ் நடிப்பில் தயாராகும் சைக்கோ திரில்லர் படம் என்பதால், ‘ஒயிட் ரோஸ்’ படத்திற்கு அறிவிப்பு நிலையிலேயே ரசிகர்களிடத்தில் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
Previous article
Next article
விக்ரம் பிரபு நடிப்பில் “இரத்தமும் சதையும்” திரைப்பட டைட்டில் லுக் வெளியானது! கார்த்திக் மூவி ஹவுஸ் சார்பில் கார்த்திக் அட்வித் தயாரிக்க, விக்ரம் பிரபு நடிக்கும் அடுத்த திரைப்படத்திற்கு “இரத்தமும் சதையும்” என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு கதை திரைக்கதையை எழுதி, அறிமுக இயக்குநர் ஹரேந்தர் பாலசந்தர் இயக்குகிறார். விக்ரம் பிரபு நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘டாணாக்காரன்’ திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதுடன் விமர்சன ரிதீயகாவும் பெரும் பாராட்டுக்களை குவித்தது. குறிப்பாக இப்படத்தில் விக்ரம் பிரபுவின் சிறப்பான நடிப்பு, அனைவராலும் பாராட்டப்பட்டது. உடலை வருத்தி தன்னை அக்கதாப்பாத்திரமாக மாற்றிகொண்டு, வாழ்ந்திருந்தார் விக்ரம் பிரபு. தற்போது அடுத்தடுத்து பல அற்புதமான படைப்புகள் அவரது நடிப்பில் வெளியாக காத்திருக்கின்றன. இந்நிலையில் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் ஹரேந்தர் பாலசந்தர் இயக்க, இயக்குநர் கார்த்திக் அட்வித் தயாரிக்கும் இந்த புதிய திரைப்படத்திற்கு “இரத்தமும் சதையும்” என பெயரிடப்பட்டுள்ளது. விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகும் ‘இரத்தமும் சதையும்’ படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது துவங்கப்பட்டு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

Must Read

spot_img