HomeNewsஅம்முச்சி 2 விமர்சனம்

அம்முச்சி 2 விமர்சனம்

 

கோவை மாவட்டம் கோடாங்கி பாளையத்தில் நாயகி மித்ராவை அவரது பட்டிக்காட்டு அப்பா படிக்க விடாமல் முரடன் ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கிறார். இதை அறிந்த மித்ராவின் காதலரான அருண் சென்னையில் இருந்து கோவை செல்கிறார். மித்ராவை கல்யாணப்பிடியில் இருந்து மீட்டெடுக்க..அருண்+ அவரது கோவை நட்புக்கூட்டணி என்னவெல்லாம் செய்கிறது என்பதே அம்முச்சி2 வின் கதை

அம்முச்சியாக நடித்திருக்கும் சின்னமணி அம்மாளின் தோற்றமும் அவருடைய உரையாடல்களும் சிலிர்க்க வைக்கின்றன.

கதையின் நாயகனாக வரும் அருண், அவருடைய சகா சசி,, நாயகி மித்ரா, வில்லனாக வரும் ராஜேஷ்பாலசந்திரன், நாயகனின் அம்மா தனம், பிரசன்னாவின் மனைவியாக வரும் சாவித்திரி உள்ளிட்ட அனைவருமே பொருத்தமாக இருக்கிறார்கள்.

 

இந்த சீரிஸின் பலமே கோவை வட்டாரமொழி வசனங்களும் அதை இயல்பாகப் பேசி நடித்துள்ள நடிகர்களும் தான்.  காளிசாமி. விவேக் சாராவின் பின்னணி இசை கதைக்களத்தோடு பிணைந்திருப்பது பலம். இத்தொடரை இயக்கியிருக்கும் ராஜேஷ்வர் காளிசாமிக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.
.

 

 

Must Read

spot_img