spot_img
HomeNews‘மேதகு-2’விமர்சனம்

‘மேதகு-2’விமர்சனம்

கடந்த 2021 ஜூன் மாதம் தமிழீழ தலைவர் பிரபாகரன் வாழ்வியலை மையப்படுத்தி உருவான மேதகு படம் வெளியானது. தற்போது, அதன் இரண்டாம் பாகமாக, மேதகு திரைக்களம் சார்பில் தயாரிப்பாளர்களே இல்லாமல் ‘மேதகு-2’ படம் தயாராகியுள்ளது.

தஞ்சாவூரை சேர்ந்த தஞ்சை குகன் குமார், அயர்லாந்தில் உள்ள கவிஞர் திருக்குமரன் மற்றும் டென்மார்க்கை சேர்ந்த சுமேஷ் குமார் ஆகியோர் இதன் தயாரிப்பு நிர்வாகிகளாக செயல்பட்டு இந்த படத்தை தயாரித்துள்ளனர்.

கதாநாயகனாக தமிழீழ தலைவர் கதாபாத்திரத்தில் கௌரிசங்கர்  நடித்துள்ளார். கௌரவத் தோற்றத்தில் நாசர் நடித்துள்ளார்.

இரா.கோ யோகேந்திரன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் கதை மற்றும் வரலாற்று ஆய்வில் மேதகு திரைக்கள குழுவினருடன் சுபன் முன்னின்று உதவி புரிந்துள்ளார்.

இசையமைப்பாளர் பிரவின் குமார், ஒளிப்பதிவாளர் வினோத் ராஜேந்திரன், படத்தொகுப்பு ஆதித்யா முத்தமிழ் மாறன் (குவியம் ஸ்டுடியோ) கலை இயக்குனர் இன்ப தினேஷ், சண்டை பயிற்சி ஜாக்குவார் தங்கம் மற்றும் அவரது மகன் விஜய் ஜாக்குவார் தங்கம்,  பாடகர்கள் சைந்தவி,  புதுவை சித்தன் ஜெயமூர்த்தி என இந்தப்படத்தின் தொழில்நுட்ப குழுவும் மிகப்பெரிய பங்களிப்பை இந்தப்படத்திற்காக வழங்கியுள்ளனர்.

வரும் ஆகஸ்ட்-19ஆம் தேதி இந்த படம் வெளிநாட்டு திரையரங்குகளில் உலகெங்கிலும் வெளியாக இருக்கிறது. இப்போதே ஐரோப்பா நாடுகள், ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா ஆகியவற்றில் முன்பதிவு துவங்கியுள்ளது.

தியேட்டர்களில் படம் வெளியான சில நாட்களிலேயே தமிழ்ஸ் ஓடிடி தளத்தில் (www.tamilsott.com) இந்த படம் வெளியாக இருப்பதால், படத்தை திரையிட முடியாத இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை மற்றும் அரபு நாடுகள் ஆகியவற்றில் உள்ள மக்களும் இந்தப்படத்தை பார்க்க முடியும்.

Previous article
Next article
இறுதிக்கட்ட படபிடிப்பில் நடிகர் சிம்ஹாவின் ‘தடை உடை’ விரைவில் நிறைவடையவிருக்கும் நடிகர் சிம்ஹாவின் ‘தடை உடை’ படபிடிப்பு சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்ற நடிகர் சிம்ஹாவின் புதிய திரைப்படமான ‘தடை உடை’ எனும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடையவிருக்கும் சூழலில், இப்படத்தில் அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் நடிகை ரோகிணி, தன்னுடைய பங்களிப்பை நிறைவு செய்திருக்கிறார். அறிமுக இயக்குநர் என். எஸ். ராகேஷ் இயக்கத்தில் தயாராகி வரும் முதல் திரைப்படம் ‘தடை உடை’. இதில் நடிகர் சிம்ஹா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மிஷா நரங்க் நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர் பிரபு, செந்தில், நடிகை ரோகிணி, மணிகண்ட பிரபு, சரத் ரவி, ‘பழைய ஜோக்’ தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சக்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹதீஃப் இசையமைத்திருக்கிறார். ஆக்சன் திரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை முத்ராஸ் ஃபிலிம் ஃபேக்டரி எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரேஷ்மி சிம்ஹா பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார். மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முழுமையாக நிறைவு பெறவிருக்கிறது. இந்நிலையில் நடிகை ரோகிணி தொடர்புடைய காட்சிகளின் படபிடிப்பு நிறைவடைந்ததை முன்னிட்டு, படக் குழுவினர் நடிகை ரோகிணியுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினர்.

Must Read

spot_img