16 வருடங்களுக்கு முன் ஊட்டியில் நிகழ்ந்த கொள்ளை மற்றும் கொலை சம்பவத்தை விசாரிக்க ஊட்டி வருகிறார் ட்ரெயினிங் எஸ்ஐ அருள்நிதி
அவர் வழக்கை விசாரிக்க போய் மேலும் சில பல மர்மங்களை சந்திக்கிறார் மர்மங்கள் என்ன
தான் விசாரிக்கும் வழக்கின் மர்மத்தை எப்படி துப்பறிகிறார் மர்மத்தின் முடிச்சு என்ன முடிச்சை எப்படி அவிழ்கிறார் இதுவே டைரியின் கதை சுருக்கம்
அருள்நிதி படம் என்றாலே கிரைம் ஹாரர் அமானுஷ்யம் இவை மூன்றில் ஒரு விஷயம் எப்படியும் படத்தில் இருக்கும் ஆனால் இந்த படத்தில் அவை மூன்றும் கலந்திருக்கிறது
]அருள்நிதி நடிப்பு நம் தமிழக மக்கள் அறிந்ததே மக்கள் எதிர்பார்த்ததை மாறாமல் செய்திருக்கிறார் அருள்நிதி
கதாநாயகி பவித்ரா ஊட்டியில் டூட்டியில் இருக்கும் சப் இன்ஸ்பெக்டர் இவரின் வழிகாட்டில் பேரில் தான் அருள்நிதி வழக்கை விசாரிக்க இறுதியில் அவர் உடன் வாழ்க்கையை பகிர்ந்து கொள்கிறார்
இவர்கள் காதல் எப்படி பிறந்தது என்பது பழங்கால சினிமா வரலாற்றின் மாறாத ஃபார்முலா
அருள் நிதியின் கார் திருட்டு
காரில் இருக்கும் கடத்தப்பட்ட பெண்
இந்தக் காட்சி படத்திற்கு எதற்கு கேள்வி எழுகிறது
முக்கியமான விஷயத்தை சொல்ல மறந்து விட்டேன் பஸ்ஸில் பயணிக்கும் அருள்நிதி உடன் பயணிக்கும் பயணிகள் இவர்களின் கதாபாத்திரங்கள் இவர்கள் யார் எதற்கு பஸ்ஸில் பயணிக்கிறார்கள் என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்
நகைச்சுவை நடிகர் சாம்ஸ் காமெடிக்கு இயக்குனர் வாய்ப்பு தராததால் ஆங்காங்கே சில சிரிப்பு ஊசி வெடிகளை வெடித்துக்கிறார்
சிலது நமத்து போயிருக்கிறது
அவதார் படத்தின் கதையை யோசிக்க தெரிந்த இயக்குனருக்கு அதற்கு எப்படி திரைக்கதை அமைத்து மக்கள் ரசிக்கும்படி படத்தை எடுத்திருந்தார்
ஆனால் டைரி படத்தின் இயக்குனர் இன்னாசி பாண்டியனுக்கு வித்தியாசமாக கதையை யோசித்து திரைக்கதையில் கோட்டை விட்டுவிட்டார்
டைம் லூப் கதை போல் டைரி லீப் கதை