பல விதமான எதிர்பார்ப்புடன் விக்ரம் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் கோபுரா கதைக்களம்சர்வதேச அளவில் மாட்டிக்கொள்ளாமல் கொலைகள் செய்கிறார்
விக்ரம்
அவற்றை விசாரிக்க வருகிறார் இன்டெர்போல் ஆபிசர் இர்பான் பதான்
ஸ்காட்லாந்திலும் கொலை செய்கிறார் விக்ரம் இந்தியாவிலும் கொலை செய்கிறார் இரண்டு கொலைகளும் செய்தது ஒரே நபர் தான் என்று கணித இயல்படிக்கும் மாணவி கண்டுபிடித்து இந்த கொலைகள் கணித முறையில் தான் கொலை நடந்திருக்கிறது என்று கூற அவருடன் இணைந்து இன்டர் போல் ஆபிசர் விசாரணை இறங்க அவருக்கு பல அதிர்ச்சிகள் காத்திருக்கிறது
நமக்கும்தான்
சாமுராய் படத்திற்கு அப்புறம் விக்ரம் அதிக கெட்டப்புகளில் படத்தில் தோன்றுகிறார் தன் ரசிகர்கள் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்து இருக்கிறார் விக்ரம
மேத்யூ ஸ்ரீநிதி மீனாட்சி ரோபோ சங்கர் கே எஸ் ரவிக்குமார் என பல கதாபாத்திரங்கள் இருந்தாலும் படம் முழுக்க விக்ரம் விக்ரம் விக்ரம் இவரின் ஆக்கிரமிப்பு அதிகம் அதனால் மற்ற கதாபாத்திரங்கள் மனதில் நிற்கவில்லை
கணிதத்தை கருவாகக் கொண்டு கதைக் களம் அதை தெளிவாக அமைத்திருக்கும் இயக்குனர் அதை தெளிவாக கூறியிருந்தால் பாமரனுக்கும் புரிந்திருக்கும்
கணிதமேதை ராமானுஜத்தின் வாழ்க்கை வரலாற்றை இயக்குனர் படித்திருந்தால் திரைக்கதை அமைப்பதற்கு அவருக்கு இன்னும் ஈசியாக இருக்கும்
திரைக்கதையில் அவர் போட்டிருக்கும் கணிதம் அவரை தோல்வி அடைய செய்து விட்டது
இசை ஏ ஆர் ரகுமான் இரைச்சலை தவிர்த்து இருக்கலாம்
ஒளிப்பதிவு ஹரிஷ் கண்ணன் பிரம்மாண்டத்தை மிகப் பரமாண்டமாக காட்டி இருக்கிறார்
கோபுரா விஷ(ய)ம் அற்றது