சமீபத்தில் தமிழக அரசு அறிவித்த தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் பட்டியலில் எனது இயக்கத்தில் உருவான களவாணி, வாகை சூடவா படங்களுக்கு விருதுகள், எனது தயாரிப்பில் உருவான மஞ்சப்பை படத்திற்கு விருதுகள் என விருதுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தருணத்தில் இந்த படங்களுக்கு நல் விமர்சனங்களை தந்து ரசிக பொதுமக்களிடம் கொண்டு போய் சேர்த்த ஊடக நண்பர்களுக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்வதில் சந்தோஷப்படுகிறேன் . தொடர்ந்து உங்களுடைய ஆதரவு எப்போதும் வேண்டும். இது போன்ற நல்ல படங்களை இயக்குவதற்கு இன்னும் கடினமாக உழைப்பேன் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.