அதர்வா தான்யா நடிப்பில் பிரமோத் பிலிம்ஸ் மற்றும் மிராக்கிள் மூவிஸ் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் படம் ட்ரிக்கர் காவல்துறையில் வேலை செய்யும் அதர்வா உயர் அதிகாரியின் உத்த ரவை மீறி செயல்பட்டதால் வேலை நீக்கம் செய்யப்பட்டு ரகசியமாக காவல்துறையில் நடக்கும் தவறுகளை கண்டுபிடிக்கும் துறைக்கும் மாற்றப்படுகிறார் அப்போது தன் பார்வைக்கு வரும் குழந்தை கடத்தலை கண்டுபிடிக்க அதன் தலைவரை கைது செய்ய முயற்சிக்கும் போது பல அதிர்ச்சியான சம்பவங்களை சந்திக்க நேரிடுகிறது அது என்ன குற்றவாளியை அதர்வா கண்டுபிடிக்கிறாரா என்பதே மீதி கதை அதர்வா என் உடல் போலீஸ் துறைக்கு கச்சிதமாக பொருந்தியுள்ளது காவல்துறையில் உள்ள தவறுகளை கண்டுபிடிக்கும் துறைக்கு மாற்றப்பட்டு அந்த வேலையை செய்யாமல் மற்ற குற்றங்களை கண்டு பிடிக்கும் வேலை செய்கிறார் இதற்கு அவர் காவல்துறையிலேயே இருந்திருக்கலாம் எதற்காக வேறு துறைக்கு மாற்றப்படுகிறார் அதனால் என்ன பயன் உடன் நடிக்கும் நடிகர்களின் செயல்பாடு என்ன என்பதை தெளிவாக சொல்லாமல் நடிகர்கள் டம்மியாக இருப்பது போல் நமது தோன்றுகிறது அகர்வாலின் தந்தையாக அருண்பாண்டியன் மறதி நோயால் வாடுகிறார் அதற்கான காரணம் திரைக்கதை சொல்லப்படுகிறது நீண்ட இடைவெளிக்குப் பிறகு சின்னி ஜெயந்த் சொல்லும்படியாக பெரிதாக ஒன்றும் இல்லை நாயகி தனியா கதை களத்திற்கு ஏற்ப அனாதை குழந்தைகளை பராமரிக்கும் விடுதியில் வேலை செய்கிறார் டூயட் பாடாமல் காதல் செய்கிறார் முனீஸ் நிஷா இருந்தும் காமெடி காட்சிகள் இல்லை வில்லன் செயல்பாடுகள் தெளிவாக சொல்ல இயக்குனர் மறந்து விட்டார் இடைவேளை வரை விறுவிறுப்பாக சென்ற திரைக்கதை இடைவெளிக்கு பிறகு மிகவும் தொங்குகிறது ட்ரிகர் வேலை செய்யவில்லை