ஐந்து வருடங்களாக லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்த “அர்ணவ்’ “திவ்யா” திருமணம்

108
திருமண வாழ்வில் இணைந்த கேளடி கண்மணி நாயகன் நாயகி*
*திருமண வாழ்வில் இணைந்த சின்னத்திரை ஜோடி அர்ணவ்- திவ்யா*
*செல்லம்மா நாயகன் அர்ணவ்வுடன் செவ்வந்தி நாயகி திவ்யா திருமணம் ; கர்ப்பமான மகிழ்ச்சியில் திவ்யா*
சன் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற கேளடி கண்மணி தொடரில் கதாநாயகியாக அறிமுகமானவர் திவ்யா.
அதை தொடர்ந்து மகராசி தொடரில் நடித்தவர், தற்போது செவ்வந்தி என்கிற தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார்
அதேபோல தற்போது செல்லமா என்கிற தொடரில் நாயகனாக நடித்து வருகிறார் நடிகர் அர்ணவ்.
கேளடி கண்மணி தொடரில் நடித்தபோது அதில் கதாநாயகனாக நடித்த அர்ணவ்வுக்கும் இவருக்கும் இடையே நட்பு உருவாகி பின்னர் காதலாக மலர்ந்தது.
கடந்த ஐந்து வருடங்களாக லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்த இவர்கள் தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளனர்.  அர்ணவ் முஸ்லிம் என்பதால் இந்து மற்றும் இஸ்லாமிய முறைப்படி  தங்களது திருமணத்தை நடத்திய இவர்கள்  முறைப்படி பதிவுத் திருமணமும் செய்துள்ளனர்.
இந்த நிலையில் தான் இரண்டு மாத கர்ப்பமாக இருப்பதாக தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் திவ்யா.