spot_img
HomeNewsமுன்னணி நடிகருக்கான விருது.பெற்றார் குருசோமசுந்தரம்.

முன்னணி நடிகருக்கான விருது.பெற்றார் குருசோமசுந்தரம்.

ஆசிய கண்டத்தின் ‘ஏசியன் அகாடமிக் கிரியேட்டிவ் அவார்ட்’ சிறந்த முன்னணி நடிகருக்கான விருதை பெற்றார் நடிகர் குருசோமசுந்தரம்.
ஆசிய திரைப்படங்களுக்கான  ‘ஏசியன் அகாடமிக் கிரியேட்டிவ் அவார்ட்
2022 விருதுகள் அறிவிப்பில்
நடிகர் குருசோமசுந்தரத்திற்கு சிறந்த முன்னணி நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.
ஆசிய நாடுகளின் திரைப்படங்களுக்கான விருதுகள்
‘ஏசியன் அகாடமிக் கிரியேட்டிவ் அவார்ட்’
இந்தவருடம் வழங்கப்பட்டது.
இதில் பதினாறு நாடுகளைச்சேர்ந்த பல்வேறு மொழிப்படங்கள் கலந்துகொண்டன.
சிறந்த படம், சிறந்த இயக்கம், சிறந்த நடிகர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில்
இந்தியாவிலிருந்து சிறந்த நடிகருக்கான விருது நடிகர் குருசோமசுந்தரத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த விருது ‘மின்னல்முரளி’  படத்திற்காக அவருக்கு வழங்கப்பட்டது.
டிசம்பர் மாதம்  விருது வழங்கும் விழா சிங்கப்பூரில் நடைபெறவிருக்கிறது.
ஆசிய கண்டத்தின் பல்வேறு நாடுகளை சார்ந்த பல்வேறு மொழி திரைத்துரையை சார்ந்தவர்களும் இதில் கலந்துகொள்கிறார்கள்.

Must Read

spot_img