spot_img
HomeNewsமிரள்'விமர்சனம்…

மிரள்’விமர்சனம்…

காதல் திருமணம் செய்து கொண்டு பரத் – வாணி போஜன் ஆகியோர் மகனுடன் வாழ்ந்து வருகின்றனர். ஒரு நாள் தன் கணவரையும், தன்னையும் மர்ம நபர் ஒருவர் கொல்வது போன்ற கனவு வாணி போஜனுக்கு வருகிறது. மேலும் அவர்களை சுற்றி நடக்கும் சில சம்பவங்கள் அச்சத்தை ஏற்படுத்துகின்றன.

இந்த நிலையில் அவர்கள் மூவரும் குலதெய்வம் வழிபாட்டிற்காக சொந்த ஊர் புறப்படுகின்றனர். குலதெய்வ வழிபாடு முடிந்து தொழில் காரணமாக இல்லம் திரும்ப பரத் முடிவெடுக்கிறார்.குடும்பத்துடன் அந்த ஊரில் இருந்து புறப்பட்ட பின், ஒரு காட்டில் மாட்டிக் கொள்கின்றனர். அவர்கள் மூவரையும் வாணிபோஜன் கனவில் வந்த மர்ம நபர் கொல்ல முயற்சிக்கிறார். அது யார்? எதற்காக பரத் குடும்பத்தை கொல்ல நினைக்கிறார்? என்பதைதிகில் சினிமாவாக விரிகிறது ‘மிரள்’.திகில் படமாகத்தான் இதைக் கொடுக்க முயற்சி செய்திருக்கிறார் அறிமுக இயக்குநர் சக்திவேல். திகைப்பூட்டும் முதல் காட்சியிலேயே அதை அழுத்தம் திருத்தமாகப் பதிவுசெய்துவிடுகிறார் இயக்குநர். எடுத்துக்கொண்ட கதை வித்தியாசமாகவே உள்ளது. ஆனால் அதை திரைக்கதையாக கையாண்டதில் சற்று தடுமாற்றம் தெரிகிறது அது வெறும் கனவு எனும்போது ஏமாற்றங்கள்.

Must Read

spot_img