உயர் வகுப்பினரும் தாழ்ந்த வகுப்பினருக்கும் இடையே நடக்கும் பிரிவினைவாதத்தை ஜல்லிக்கட்டு விளையாட்டை கலந்து விறுவிறுப்பாக சொல்லப்பட்டிருக்கும் கதைதான் பேட்டை காளி
பல பரம்பரையாக பண்ணையாளராக வலம் வரும் வேலராமமூர்த்தி இடம் வேலை செய்யும் முல்லையூர் மக்களின் முன்னோடிகள் தாங்கள் விவசாயம் செய்யும் நிலத்தை தங்களுக்காக ஒதுக்குமாறு கேட்க கூலிகள் ஒரு நாளும் முதலாளி ஆக முடியாது என்று பண்ணையாரும் கூற தங்களால் இனி கூலி வேலை செய்ய முடியாது என்று ஒதுங்க அவர்கள் தலைவனாக நின்று கிஷோர் வழிநடத்த அதனால் ஏற்படும் பிரச்சனைகளை வெப் சீரியஸாக ஆஹா ஓ டிடி தளத்தில் ஒளிபரப்பு ஆகிறது
இந்த வார கதை களத்தில் கிஷோர் பண்ணையாரை கொலை செய்ய முயற்சிக்க அவர் தப்பிக்கிறார்
ஏன் கொலை செய்ய முயற்சிக்கிறார் கிஷோர் என்பதை பிளாஷ்பேக் விவரிக்கிறார் இயக்குனர்
கிஷோர் தன் பண்பட்ட நடிப்பினால் மலைவாழ் மக்களின் தலைவனாக வாழ்கிறார் ஒரு காளை மாட்டை அவர் பிடித்து செல்ல அதைத் தேடி பல நூறு மாடுகள் வர அதனால் இவர்களின் வாழ்வாதாரம் உயர்வதாக சொல்வது காதில் பூ சுத்துவது போல் உள்ளது
வேலராமமூர்த்தி பண்ணையாராக தெனாவட்டாக வலம் வருகிறார் தன் மகள் வயதுள்ள பெண்ணை இவர் இரண்டாம் திருமணம் முடிப்பது வில்லத்தனத்துக்கு இது செய்ய வேண்டும் என்பது போல் இருக்கிறது
கலையரசன் மாடுபிடி வீரனாக விளையாடி இருக்கிறார் அவர் கொலை செய்யப்பட்டது யாரால் என்பதை நாம் காணும் போது ஏதோ சொல்ல வேண்டும் என்பது போல் இருக்கிறது
வாடிவாசல் காளைகளை அடக்கும் காட்சிகள் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட காட்சிகளாக இருக்கிறது இயக்குனர் எதையோ சொல்ல வந்து எதையோ சொல்லி இருக்கிறார்
கதை களம் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தது பல பேர் வட்டார மொழி பேசுவதை காண முடியவில்லை
வெற்றிமாறன் தயாரிப்பு சோடை போகாது வரும் எபிசோடுகளில் அதை எதிர்பார்க்கலாம் என்று நாம் எதிர்பார்க்கிறோம்