spot_img
HomeNewsஉச்சிமலை காத்தவராயன்’ பாடலை அறிமுகப்படுத்துவதற்கான பட்டிமன்றத்தின் முன்னோட்டம்

உச்சிமலை காத்தவராயன்’ பாடலை அறிமுகப்படுத்துவதற்கான பட்டிமன்றத்தின் முன்னோட்டம்

உச்சிமலை காத்தவராயன்’ பாடலை அறிமுகப்படுத்துவதற்கான பட்டிமன்றத்தின் முன்னோட்டம் வெளியீடு

தமிழ் திரையுலகில் படைப்புகளை உருவாக்குவது எளிது. அதனை ரசிகர்களிடம் அறிமுகப்படுத்தி, பிரபலப்படுத்துவது கடினம். இந்நிலையில் நடிகர் ஆர் ஜே விஜய் , மா. கா.பா ஆனந்த் மற்றும் ஆஷ்னா ஜாவேரி நடிப்பில் ‘உச்சிமலை காத்தவராயன்’ பாடலை அறிமுகப்படுத்துவதற்காக, திரையுலக பிரபலங்களுக்கு இடையே நடைபெற்ற பட்டிமன்றத்தின் முன்னோட்ட காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.

இசையமைப்பாளர் ஆனிவீ இசையில், இயக்குநர் டோங்லீ இயக்கத்தில், நடிகை ஆஷ்னா ஜாவேரி, மா. கா. பா. ஆனந்த் மற்றும் ஆர். ஜே. விஜய் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘உச்சிமலை காத்தவராயன்’ எனும் பாடலை சரிகம நிறுவனம் வெளியிடுகிறது. இதற்காக ரசிகர்களை ஆர்வமூட்டும் வகையில், திரை பிரபலங்களான நடிகர் மா. கா. பா. ஆனந்தும், நடிகர் ஆர். ஜே. விஜயும் தனி தனி அணியாக பிரிந்து பட்டிமன்றம் நடத்தினர். இதற்கு முன்னதாக ட்வீட்டரில் இருவரும் சுவராசியமான கருத்து மோதல்களில் ஈடுபட்டனர்.

நடிகை ஆஷ்னா ஜாவேரி தனது புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் இதனை பார்வையிட்ட நடிகரும், பாடலாசிரியருமான ஆர். ஜே. விஜய்..,

‘ அழகே பொறாமைப்படும் பேரழகு..’ என பதிவிட்டார்.

உடனடியாக மா. கா. பா. ஆனந்த் ட்விட்டரில்,

” தம்பி இது ரொம்ப பழைய விசயம்” என பதிவிட்டதுடன்..,

” தம்பி அடிபட்டா தேவை மெடிக்கல் கிட்-டு
ஆஷ்னாவ கரெக்ட் பண்ண தேவை ஒரு செமையான ட்வீட் -டு
நீ போயிரு இந்த ஏரியாவை விட்டு..” என பதிவிட..,

பதிலுக்கு ஆர். ஜே. விஜய் ட்விட்டரில்..

” க்யூட்-டுக்கு எதுக்கு ட்வீட் -டு
ஆஷ்னா தான் என்னோட ஹார்ட் பீட்-டு” என என பதிவிட்டு, மோதலை தொடங்கினார்.

‘மழை வந்தா தேவ அம்பர்லா
பெண்ணே நீ தான் மை சிண்ட்ரெல்லா..’ என்ற வரிகளைக் குறிப்பிட்டு, இசையமைப்பாளர் ஆனிவீ தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நடிகை ஆஷ்னா ஜாவேரியின் பிரத்யேக புகைப்படத்தைப் பதிவிட்டார்.

இவர்களின் தீவிரமான மோதலைக் கண்ட இயக்குநரும், தயாரிப்பு நிறுவனமும், ‘வாங்க பேசிக்கலாம்’ என சமாதான ட்வீட்டை பதிவிட்டது.

பிறகு இருவருக்கும் இடையே ‘ஆஷ்னாவிற்காக’ பட்டிமன்றம் நடைபெற்றது. இந்தப் பட்டிமன்றத்தின் இரு அணிகளும் ரைமிங் வேர்ட்ஸ்களாலும், டைமிங் வேர்ட்ஸ்களாலும் மோதிக்கொண்டனர்.

‘உச்சிமலை காத்தவராயன்’ பாடலுக்காக ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வகையில் நடைபெற்ற இந்த பட்டிமன்றத்தின் முன்னோட்ட காணொளி தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. விரைவில் பாடல் வெளியாகிறது.

பாடலை ரசிகர்களிடம் வித்தியாசமான முறையில் அறிமுகப்படுத்திய படக்குழுவினரின் முயற்சியை இணையவாசிகளும், திரையுலகினரும் பாராட்டுகிறார்கள்.

Must Read

spot_img