spot_img
HomeNewsயோகிபாபு- இனியா நடிக்கும் ‘தூக்குதுரை’

யோகிபாபு- இனியா நடிக்கும் ‘தூக்குதுரை’

அரவிந்த் வெள்ளைபாண்டியன் மற்றும் அன்புராசு கணேசன் வழங்கும், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் யோகிபாபு- இனியா நடிக்கும் ‘தூக்குதுரை’

மிகச் சில நகைச்சுவை நடிகர்கள் மட்டுமே நகைச்சுவை கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்காமல் தனித்துவமான கதாபாத்திர வேடங்களிலும் திறமையாக நடிக்கிறார்கள். அதில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக நடிகர் யோகிபாபு கதையின் நாயகனாகவும் பல வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கிறார். இப்போது அவர் கதையின் முக்கிய பாத்திரமாக நடிக்க இருக்கும் புதியப் படத்திற்கு ‘தூக்குதுரை’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. நடிகை இனியா கதையின் நாயகியாக நடிக்கிறார்.

அட்வென்ச்சர் த்ரில்லர் படமான ‘ட்ரிப்’ படப்புகழ் டென்னிஸ் மஞ்சுநாத் இந்தப் படத்தை இயக்குகிறார். ’தூக்குதுரை’ திரைப்படம் ‘PRE’ (Period-Royal-Entertainer) ஜானர் வகையைச் சேர்ந்தது மற்றும் மூன்று விதமான காலங்களில் அதாவது 19ம் நூற்றாண்டு, 1999 மற்றும் 2022 ஆகிய காலங்களில் கதை நடக்கிறது.

யோகிபாபு’வுடன் – இனியா கதாநாயகியாக நடிக்கிறார்.மொட்ட ராஜேந்திரன், மகேஷ், பால சரவணன், சென்றாயன், மாரிமுத்து, நமோ நாராயணன், அஷ்வின், சத்யா, சீனியம்மா, வினோத் தங்கராஜூ, சிந்தாலப்பட்டி சுகி, ராஜா வெற்றி பிரபு மற்றும் பலர் நடிக்கின்றனர்.

படத்தின் தொழில்நுட்பக் குழு விவரம்:
இயக்குநர்: டென்னிஸ் மஞ்சுநாத்,
ஒளிப்பதிவு: ரவி வர்மா கே,
இசை: கே.எஸ். மனோஜ்,
படத்தொகுப்பு: தீபக் எஸ் துவாரக்நாத்,
கலை: ஜெய் முருகன் மற்றும் பாக்கியராஜ்,
சண்டைப்பயிற்சி: மான்ஸர் முகேஷ் & ராம்குமார்,
பாடல் வரிகள்: அறிவு & மோகன்ராஜன், நடணம்: ஸ்ரீதர்,
ஆடை வடிவமைப்பாளர்: நிவேதா ஜோசப்,
காஸ்ட்யூமர்: பாலாஜி,
ஒப்பனை: ஏ.பி. முகமது,
Effects & Logics (VFX): அரவிந்த்,
நடிகர்கள் தேர்வு (Casting): ஸ்வப்னா ராஜேஷ்வரி,
படங்கள்: சாய் சந்தோஷ்,
தயாரிப்பு மேலாளர்: மனோஜ் குமார்,
தயாரிப்பு நிர்வாகி: பாலாஜி பாபு எஸ்,
நிர்வாகத் தயாரிப்பாளர்: ஜெயசீலன்,
மக்கள் தொடர்பு: டீம் D’One,
விளம்பர வடிவமைப்பு: சபா டிசைன்ஸ்
இனை-தயாரிப்பு : வினோத் குமார் தங்கராஜூ

Must Read

spot_img