திரைக்கு வருகிறது ஒவேலி
மேற்கு தொடர்ச்சி மலையின் முழு அழகையும் ஒருங்கே கொண்ட இடம் நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள ஓவேலி கிராமம். கேமரா கண்களில் படாத மழைக்காடுகளை கொண்ட கூடலூர் மக்களின் வாழ்வியல் முதன் முறையாக திரைப்படமாக தயாராகியுள்ளது. நீலகிரி
கூடலூரைச் சேர்ந்த சுல்ஃபி இப்படத்தை எழுதி இயக்கி உள்ளார்.
இப்படத்தை மேஜிக் கார்பெட் நிறுவனம் சார்பில் அனிதா சுதர்சனம் தயாரிக்கிறார்.
ஸ்ருதி பிரமோத், கிரீஷ், கிருஷ்ணகுமார், மஞ்சு, சல்மான், அபிராமி மற்றும் பலர் நடிக்க, வி. ஏ. சார்லி யின் இசையமைக்கிறார். ஜி. கிருஷ்ணகுமார், அனிதா சுதர்சனம் மற்றும் சுனிதா ஷேர்லி ஆகியோர் பாடல்கள் எழுதி உள்ளார். இளம் ஒளிப்பதிவாளர் நவீன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சண்டை பயிற்சி ஹாரிஸ் IDK, எடிட்டிங்கை வீர செந்தில் ராஜ் கவனிக்க ,கலை இயக்குனர் ராகவா கண்ணன் மேலும் 5.1 ஒலிக்கலவையை ஆர். ஜனார்த்தனன் செய்துள்ளார்.