spot_img
HomeNews'வீரசிம்ஹா ரெட்டி' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

‘வீரசிம்ஹா ரெட்டி’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் ‘வீரசிம்ஹா ரெட்டி’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

நந்தமுரி பாலகிருஷ்ணா- கோபிசந்த் மலினேனி- மைத்ரி மூவி மேக்கர்ஸ் கூட்டணியில் தயாரான ‘வீர சிம்ஹா ரெட்டி’ எனும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘வீர சிம்ஹா ரெட்டி’. மாஸ் ஹீரோவான நடசிம்ஹா நந்தமுரி பாலகிருஷ்ணா கதையின் நாயகனாக நடித்திருக்கும் இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்திருக்கிறார். இவர்களுடன் துனியா விஜய், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ரிஷி பஞ்சாபி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைத்திருக்கிறார். பிரபல கதாசிரியர் சாய் மாதவ் புர்ரா வசனங்களை எழுத, தேசிய விருது பெற்ற கலைஞர் நவீன் நூலி படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவிசங்கர் தயாரித்திருக்கிறார்கள். ஏ. எஸ். பிரகாஷ் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், சந்து ரவிபதி நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார்கள்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டைட்டில் லுக்கிற்கான மோஷன் போஸ்டர், ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில் பட குழுவினர், படத்தின் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். அந்த வகையில் நந்தமூரி பாலகிருஷ்ணா நடித்திருக்கும் ‘வீர சிம்ஹா ரெட்டி’ சங்கராந்தி விடுமுறையை முன்னிட்டு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதி வெளியாகிறது.

சங்கராந்தி என்பது தெலுங்கு பேசும் மக்கள் கொண்டாடும் மாபெரும் திருவிழாவாகும். மேலும் சங்கராந்தி விடுமுறை தேதியில் வெளியான மாஸ் ஹீரோ பாலகிருஷ்ணாவின் பல திரைப்படங்கள் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி, தொழில் ரீதியாக மிக பெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. இதன் காரணமாக பாலகிருஷ்ணா நடிப்பில் தயாராகியிருக்கும் ‘வீர சிம்ஹா ரெட்டி’யையும் எதிர்வரும் சங்கராந்தி விடுமுறையில் படக் குழு வெளியிடுகிறது.

Must Read

spot_img