நான் புரட்சி தளபதியும் அல்ல தளபதியும் அல்ல என் பெயர் விஷால் அவ்வளவு தான் – நடிகர் விஷால்
பொதுவாகவே திருட்டு வீடியோவை பிடிக்காது இப்போது லத்தி வேறு கையில் இருக்கிறது இறங்கி அடிப்பேன் – நடிகர் விஷால்
விஷால் நடிக்க, ராணா புரொடக்ஷன்ஸ் சார்பில் நடிகர்கள் ரமணா, நந்தா தயாரிப்பில் உருவாகி வரும் படம் #லத்தி. வரும் 22ம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இப்படத்தை
ஆர்.வினோத் குமார் இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.
நான்கு மொழிகளில் தயாராகியிருக்கும் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் லத்தி படத்தின் டிரைலரை வெளியிட்டார். அவ்விழாவில் கலந்து கொண்ட லத்தி படக் குழுவினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பேசியதாவது :
நடிகர் விஷால் பேசும்போது,
ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து புரட்சி தளபதி வாழ்க என்று சொல்ல,
வேண்டாம்.. நான் தளபதி அல்ல, புரட்சி தளபதியும் அல்ல. என் பெயர் விஷால் அவ்வளவு தான்.. என்று பேச்சை ஆரம்பித்தார்.
#லத்தி திரைப்படம் நான்கு மொழிகளில் டிசம்பர் 22ஆம் தேதி வெளியாகிறது. முதலில் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இது எனது வழக்கமாக நடக்கும் விஷயம். சால்வையும், மலர்க்கொத்தும் சிறிது நேரம் மட்டும் முக்கியத்துவம் அளிக்கும் வீண் விரய செலவு. அந்த பணத்தில் இரண்டு குழுந்தைகளின் படிப்பு செலவிற்கு கொடுப்பது வழக்கம். இன்றும் அதைத்தான் செய்திருக்கிறேன்.
ஜாங்கித் சாருக்கு கான்ஸ்டபிள் சல்யூட் செய்கிறேன். பல நூறு குற்றங்களை உங்களுடைய அனுபவத்தில் சந்தித்திருக்கிறீர்கள்.
லோகேஷ் கனகராஜ் விஜயை இயக்குவதைக் கண்டு பொறாமையாக இருக்கிறது. நானும் விரைவில் விஜயிடம் கதை சொல்லி இயக்குவேன்.
வினோத் 8 நாட்களில் சம்மதம் வாங்கிவிட்டார். முதலில், கதை கூறும் முன்பு உங்களிடம் ஒன்று கூற வேண்டும் என்றார். சொல்லுங்கள் என்றேன், நீங்கள் 8 வயது பையனுக்கு அப்பா என்றார். அதெல்லாம் சரி நீங்கள் முதலில் கதையைக் கூறுங்கள் என்றேன். கதை கேட்டு முடித்ததும் நான் என்ன உணர்ந்தேனோ அதை பார்ப்பவர்களும் உணர்வார்கள் என்று நம்புகிறேன்.
படப்பிடிப்பில் வேண்டுமென்றே அடிவாங்கவில்லை. சரியாக கட்டி முடிக்காத கட்டிடத்தில் நடக்கக் கூடிய சண்டைக் காட்சிகள். 80 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அடிப்படுவதை தவிர்க்க முடியவில்லை. பீட்டர் ஹெயினின் பணியைக் கண்டு வியந்தேன்.
இப்படத்தில் இரண்டு பேர் பேசப்படுவார்கள். ஒருவர் யுவன் சங்கர் ராஜா, இரண்டாவது பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் பேசப்படுவார். நான் எந்த வண்டியில் சென்றாலும் பொன்.பார்த்திபனையும் அழைத்து செல்வன். பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் கேட்ட விஷயங்களை செய்து தர முடியுமா? என்று சந்தேகப்பட்ட விஷயங்களை சுலபமாக செய்து கொடுத்த கலை இயக்குர் கணேஷுக்கு முக்கியமாக நன்றி கூற வேண்டும்.
45 வயது, 32 படம் சண்டைக் காட்சிகளில் நடிப்பது சாதாரண விஷயம். ஆனால், ராகவ் 100 அடி உயரத்தில் கம்பியில் பிடித்து தொங்க வேண்டும். 4வது மாடியில் இருந்து நெட்டில் இருவரும் குதித்தோம். முன்பே ராகவ் பெற்றோருக்கு நிறைய சண்டைக் காட்சிகள் இருக்கும் என்று சொல்லக் கூடாது என்று திட்டினேன். ஆனால், நிஜமாக சொல்கிறேன், எந்த குழந்தையாலும் நடிக்க முடியாது. அவனுக்கும், அவனுடைய பெற்றோருக்கும் நன்றி.
ஒரு தயாரிப்பாளர் இறங்கி வேலை செய்தால் அதைவிட சௌகரியான விஷயம் நடிகருக்கு அமையாது. அப்படி ஒரு தயாரிப்பாளர்களாக ரமணாவும், நந்தாவும் இருந்தார்கள். ஒரு படத்திற்கு இந்தளவிற்கு தான் பட்ஜெட் என்று ஒதுக்கப்படும். ஆனால், இந்த விஷயங்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று செலவை அதிகப்படுத்த வேண்டும் என்று தயாரிப்பாளர்களே கூறியது மகிழ்ச்சியாக இருந்தது. இப்படியொரு தயாரிப்பாளர்கள் இருந்தால், 4வது மாடியில் இல்லை, 8வது மாடியில் இருந்தும் கூட குதிக்கலாம்.
மக்கள் தொடர்பாளர் ஜான்சர் சாருக்கும் நன்றி. என்னுடன் நடித்த நடிகை சுனைனாவிற்கு நன்றி.
நான் சாதாரணமாகவே திருட்டு வீடியோ இருந்தால் இறங்கி கேள்வி கேட்பேன். இப்போது லத்தி வேறு கையில் இருக்கிறது. ஆகையால், அனைவரும் திரையரங்கிற்கு வந்து படத்தை பாருங்கள், நன்றி என்றார்.
டிஜிபி ஜாங்கித் பேசும்போது,
இந்த வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. பொதுவாக சினிமாவில் கதாநாயகர்கள் பெரிய பதவியில் இருக்கும் கதாபாத்திரத்தைத் தான் விரும்புவார்கள். ஆனால், காவல்துறைக்கு நல்லப் பெயரோ கெட்டப் பெயரோ ஒரு கான்ஸ்டபிள் பொதுமக்களிடம் நடந்துகொள்ளும் விதத்தில் தான் கிடைக்கும். நிஜத்தில் ஒரு கான்ஸ்டபிளாக இருப்பது எளிதல்ல அவருக்கு பல சவால்கள் இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தை முதன்முறையாக ஹீரோவாக தேர்ந்தெடுத்து நடித்த விஷாலுக்கு நன்றி.
எட்டு வருடங்களுக்கு முன்பு, ஒரு கால் வந்தது. நான் வினோத் பேசுறேன், நான் ஒரு திரைப்படம் இயக்கப் போகிறேன். அதற்காக நீங்கள் உதவிபுரிய வேண்டும் என்றார். நான் தேதியும் நேரமும் கொடுத்து வர சொன்னேன்.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் பேசும்போது,
மார்க் ஆண்டனி கதை கூறி முடித்த நேரத்தில், லத்தி படத்தின் கதையை கூறியதும் எனக்கு மிகவும் பிடித்து விட்டது. மார்க் ஆண்டனி படத்தின் படப்பிடிப்பில் அங்கங்கு அடிபட்டு தான் வருவார். உடனே இப்படத்தின் படப்பிடிப்பிற்கு செல்ல வேண்டும். நான் வேண்டாம் என்று கூறினேன். ஆனால், விஷால் அண்ணன் கேட்கவே மாட்டார். கடினமாக உழைத்தார்.
புதுமுக இயக்குநருக்கு இவ்வளவு பெரிய படம் கிடைப்பது அரிது. அதற்கு ஆர்.வினோத் குமாருக்கு வாழ்த்துகள். யுவன் இசையில் கிழித்து விட்டார் என்றார்.
இயக்குநர் தயாரிப்பாளர் வினோத் குமார் பேசும்போது,
ஆதிக் கூறியதுபோல, எனக்கு படம் பார்க்கும்போது திருப்தியாக இருந்தது. இயக்குநர் வினோத்திற்கு வாழ்த்துகள். ரமணா, நந்தாவிற்கு வாழ்த்துகள். பொன்.பார்த்திபனின் எழுத்திற்கு நான் ரசிகன் என்றார்.
தயாரிப்பாளர் ரமணா பேசும்போது,
ஜாங்கித் சாரை டீஸருக்கே உங்களை அழைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால், டிரைலர் வெளியீட்டு விழாவிற்கு அழைத்திருக்கிறோம். முதலில் நாங்கள் கதைகேட்டு பிடித்திருந்தால் தான் விஷாலுக்கு கூறுவோம். இல்லையென்றால், விஷால் அடிப்பார். லத்தி கதையை கேட்டதும் பிடித்தது. விஷாலிடம் கூறினோம். அவர் கதை கேட்டுவிட்டு ஒரு நாள் கழித்து தான் ஒப்புக் கொண்டார்.
சண்டைப் பயிற்சி இயக்குநர் பீட்டர் ஹெயினுக்கு மிகப் பெரிய நன்றி. இரண்டாவது பாதியில் 45 நிமிடங்கள் சண்டைக் காட்சிகள் இருக்கும். புலிமுருகனுக்கு தேசிய விருது வாங்கினேன். அதன்பிறகு இப்படத்திற்கு வாங்கப் போகிறேன் என்று கூறினார். 5 மாதங்கள் விடாமுயற்சியாக உழைத்து சண்டைக் காட்சிகளை இயக்கிக் கொடுத்தார்.
என்னை ஊக்கப்படுத்தி நடிக்க வைத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு நன்றி. என்னையும் நந்தாவையும் தயாரிப்பாளர்களாக உருவாக்கிய என் நண்பன் விஷாலுக்கு நன்றி.
இப்படத்தை முழுதாக பார்த்த பீட்டர் ஹெய்ன், நான் தான் தேசிய விருது வாங்குவேன் என்று நினைத்திருந்தேன். ஆனால், இறுதிக் காட்சிகளில் விஷாலின் நடிப்பைப் பார்த்ததும் அவருக்குத் தான் கிடைக்கும் என்றார். அவன் இவன் படத்திற்கு பிறகு விஷால் சாரின் நடிப்பை இப்படத்தில் பெரிதாக பேசுவார்கள் என்றார்.
ஒளிப்பதிவாளர் பாலு பேசும்போது,
விஷால் சாருடன் நான்காவது படத்தில் பணியாற்றுகிறேன். மிகவும் கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார். ஒவ்வொரு நாள் படப்பிடிப்பிலும் அவருக்கு அடிபட்டு கொண்டே இருக்கும். ஆனால், அதை பொருட்படுத்தாமல் நடிப்பார் என்றார்.
எழுத்தாளர் பொன்.பார்த்திபன் பேசும்போது,
சில கதைகள் தான் கேட்கும்போது நேர்மறை எண்ணங்கள் தோன்றும். கைதியும் அப்படித்தான் தோன்றியது. அதேபோல், லத்தி கதையை கேட்கும்போதும் நேர்மறை எண்ணங்கள் தோன்றியது. கைதி படத்திற்கு எழுதும்போது லோகேஷ், கைதியாக இருந்தவன் கண்ணைப் பார்த்து பேசமாட்டான். ஒருசில இடங்களில் மட்டும் கண்ணைப் பார்த்து பேசுவது போல் அடைகுறியிட்டு காட்சி எழுதுங்கள் என்று கூறினார். நான் நான்கு காட்சிகள் எழுதினேன். ஆனால், அவர் இரண்டு காட்சிகளில் மட்டுமே எடுத்தார். அவரைபோல், வினோத்தும் ஆராய்ச்சி செய்து இயக்கியிருக்கிறார்.
தாமிரபரணி படத்தில் இருந்தே அசோசியேட்டாக பணியாற்றியிருக்கிறேன். அவர் சண்டைக் காட்சிகளில் நடிக்கும்போது மிகவும் பிடிக்கும். இப்படத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்தில் அடிபடும். இருப்பினும், கடினமாக உழைத்திருக்கிறார். யுவனின் இசையும் கலந்து பார்க்கும்போது ரசிக்கும்படியாக இருக்கிறது என்றார்.
படத்தொகுப்பாளர் ஸ்ரீகாந்த் பேசும்போது,
இப்படத்தின் வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி என்றார்.
இயக்குநர் ஆர்.வினோத் குமார் பேசும்போது,
லத்தி சார்ஜ் திரைப்படம் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் கடினமாக உழைத்து உருவான படம். யுவனின் இசை பார்வையாளர்களை இழுக்கும் உந்து விசையாக இருக்கும். ஒளிப்பதிவாளர்கள் பாலசுப்பிரமணியன், பாலு சாரின் சிறப்பான பணிகள் வியக்கும்படியான காட்சிகளை கொடுத்திருக்கிறது.
நாங்கள் அனைவரும் நன்றாக பணிபுரிய எங்களுக்கு உறுதுணையாக இருந்தது விஷால் சார் தான். என்ன கேட்டாலும் ரமணாவும் நந்தாவும் தயங்காமல் செய்துக் கொடுத்தார்கள்.
இவ்விழாவிற்கு வருகைபுரிந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு நன்றி என்றார்.
தயாரிப்பாளர் நந்தா பேசும்போது,
ஜாங்சித் சாரை சிறப்பு விருந்தினராக அழைக்க சென்றபோது, அவர் நிஜகதைகளை கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். நம் கற்பனைகளுக்கும் எட்டாத விஷயங்கள் நிஜ வாழ்க்கையில் நடக்கிறது. பல நூறு கதைகளை வைத்திருக்கிறார். அத்தனையும் மறைக்கப்பட்டவை, அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியவை.
லோகேஷ் ஒரு யூனிவர்ஸ். அடுத்து அவர் என்ன செய்ய போகிறார் என்பதை அவருடைய சகோதரரிடம் கூறியதை கேட்கும்போது, பிரமிப்பாக இருந்தது.
நடிகர், நண்பன் என்பதைத் தாண்டி பார்வையாளர்கள், ரசிகர்கள் என்று விஷாலின் அவருடைய பார்வை நுணுக்கமாக இருந்தது. ஒவ்வொரு காட்சியிலும் என்ன வசனம் பேசப் போகிறோம் என்பது அவருக்கு நன்றாக தெரியும். இருப்பினும் சில மாற்றங்களைக் கூறுவார். அதைக் காட்சியாக பார்க்கும்போது பார்வையாளர்களின் மனதை எந்தளவிற்கு கவனித்திருக்கிறார் என்று நினைத்து ஆச்சிரியமாக இருந்தது.
ஜான்சன் சார் குழுவிற்கு நன்றி. இப்படம் வெற்றியடைய காத்திருக்கிறோம் என்றார்.
மாஸ்டர் ராகவ் பேசும்போது,
விஷால் அண்ணாவுடன் எனிமி படத்தில் நடித்திருக்கிறேன். லத்தி அவருடன் இரண்டாவது படம். இந்த வாய்ப்புக் கொடுத்த அனைவருக்கும் நன்றி என்றார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசும்போது,
ஜாங்கித் சாருடைய மிகப்பெரிய விசிறி. தீரன் படத்தில் இருந்தே அவரை மிகவும் பிடிக்கும். இன்று சந்திக்க வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. பொதுவாக எனக்கு ஆக்ஷன் படங்கள் தான் பிடிக்கும். முதல் நான் முதல் காட்சியை பார்த்துவிடுவேன். அதேபோன்ற ஆக்ஷன் படத்தின் டிரைலர் வெளியிட அழைத்ததற்கு நன்றி. இப்படத்தின் டிரைலரை பார்க்கும்போது வினோத்திற்கு முதல் படம் போல தெரியவில்லை. இப்படம் வெற்றியடைய வாழ்த்துகள் என்றார்.
Laththi trailer launch video link
Vishal speech
https://we.tl/t-WhtHsHZrf9
Lokesh kanagaraj speech
https://we.tl/t-94SBQR7cIJ
Nanda speech
https://we.tl/t-GPg0U3XZbb
Ramana speech
https://we.tl/t-KgausKTBYT
Director vinoth speech
https://we.tl/t-JTOgtM062B
DGP Jangid speech
https://we.tl/t-c4nq07F9rn
Adhik Ravichandran speech
https://we.tl/t-8Eax9xYofa
Producer vinoth speech
https://we.tl/t-QERSqA9ReN
Editor srikanth speech
https://we.tl/t-EOeb3A7brj
Writer pon parthipan speech
https://we.tl/t-sx5OtGYEcz