spot_img
HomeNewsசோனி லிவ் ஓடிடி தளத்தில் 'ஸ்டோரி ஆஃப் திங்ஸ்' ஜனவரி6, 2023-ல் ப்ரீமியர் ஆக இருக்கிறது

சோனி லிவ் ஓடிடி தளத்தில் ‘ஸ்டோரி ஆஃப் திங்ஸ்’ ஜனவரி6, 2023-ல் ப்ரீமியர் ஆக இருக்கிறது

சோனி லிவ் ஓடிடி தளத்தில் Chutzpah Films Production-ன் ‘ஸ்டோரி ஆஃப் திங்ஸ்’ ஜனவரி6, 2023-ல் ப்ரீமியர் ஆக இருக்கிறது

சிறந்த உள்ளடக்கம் கொண்ட கதைகளை பார்வையாளர்களுக்கு வழங்கி வருவதன் மூலம் சோனி லிவ், ஓடிடி உலகில் தனது தனித்தன்மையை நிரூபித்துள்ளது. அதன் உயர்தரமான விஷூவல், ஒலியின் தரம், கதையின் தன்மை என சிறந்த பொழுதுபோக்கு அம்சங்கள் மூலம் தொடர்ச்சியாக தன்னுடைய பார்வையாளர்களைத் தக்க வைத்து வருகிறது. இப்பொழுது மற்றொரு பிரம்மாண்டமான படைப்பான ‘ஸ்டோரி ஆஃப் திங்ஸ்’ வருகிற ஜனவரி 6, 2023-ல் ப்ரீமியர் ஆக இருக்கிறது.

‘ஸ்டோரி ஆஃப் திங்ஸ்’ என்பது மனிதர்களைச் சுற்றி நடக்கும் கதைகளின் தொகுப்பு மற்றும் பொருட்களுடனான அவர்களின் தொடர்பை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஆந்தாலஜி அடிப்படையிலான திரைப்படம். இது மனித கதைகள் மற்றும் உணர்ச்சிகளுக்கு இடையிலான உண்மை மற்றும் அதற்கு அப்பால் இருக்கும் வெளியை நோக்கி நகரும் கதையாக அமையும்.

இந்த கதைத் தொகுப்புகளுக்கு ‘Cellular’, ‘Weighing Scale’, ‘Compressor’, ‘Car’ & ‘Mirror’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு கதையும் மனித உணர்ச்சிகளை ஆராய்கிறது மேலும் அங்கு பொருள் ஒரு முக்கிய கதாபாத்திரமாக இருக்கிறது.

‘Mirror’ கதையில் வினோத் கிஷன் & அன்ஷிதா ஆனந்த், ‘Cellular’ கதையில் அதிதி பாலன், கெளதமி தடிமல்லா மற்றும் அர்ஜூன் ராதாகிருஷ்ணன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘Car’ கதையில் சாந்தனு பாக்யராஜ், சித்திக் KM மற்றும் அர்ச்சனா ஆகியோர் நடித்துள்ளனர். பரத் நிவாஸ் & லிங்கா ‘Weighing Scale’ கதையில் நடித்துள்ளனர். ரித்திகா சிங் & ரோஜூ ‘Compressor’ கதையில் நடித்துள்ளனர்.

ஜார்ஜ் K ஆண்டனி இயக்கியுள்ள இந்தப் படத்தை Chutzpah Films தயாரித்துள்ளது.

படத்தின் தொழில்நுட்பக்குழு விவரம்:

ஒளிப்பதிவு: ஹர்ஷவர்தன் வாக்தாரே,
தயாரிப்பு வடிவமைப்பு: செல்வகுமார் V,
காஸ்டிங் இயக்குநர்: சரண்யா சுப்ரமணியம் (Sharanya Spots Talent),
உடைகள் வடிவமைப்பு: பினிதா ராமநாதன்,
இசை & பின்னணி இசை: மேட்லி ப்ளூஸ் (பிரஷாந்த் டெக்னோ, ஹரிஷ் வெங்கட்),
ஒலி வடிவமைப்பு: சச்சின் சுதாகரன், ஹரிஹரன். M (சிங்க் சினிமா),
ஒலிக்கலவை: அரவிந்த் மேனன், கதம் சிவா,
படத்தொகுப்பு: ஜார்ஜ் K ஆண்டனி,
கலரிஸ்ட்: சுரேஷ் ரவி (Mango Post),
VFX: Mango Post,
ஜூனியர் புரொட்யூசர்: ஹரிணி மணி,
போஸ்ட் புரொடக்சன் ஹெட்: ஸ்ரீராம் ராஜேந்திரன்,
ட்ரைய்லர் எடிட்டர்: செந்தூரன் V,
லைன் புரொடக்சன்: Happy Unicorn Pvt Ltd,
டைட்டில் டிசைன்: அர்ஜூன் ஜவஹர்,
பப்ளிசிட்டி டிசைன்: 1928 × One Club Entertainment,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா, ரேகா- D’One

Must Read

spot_img