இதுவரை யாரும் யோசிக்காத கருவை சிறப்பாக கையாண்டிருக்கிறார் இயக்குநர் ஆர்.கே.வித்யாதரன்! – ‘கடைசி காதல் கதை’ படத்தை பாராட்டும் பத்திரிகையாளர்கள்
‘லவ் டுடே’ படத்தை போல் ‘கடைசி காதல் கதை’ படமும் இளைஞர்களை கவரும்! – பத்திரிகையாளர்கள் பாராட்டு
அருமையான மெசஜ் சொல்லும் ஜாலியான படமாக உருவாகியுள்ள ‘கடைசி காதல் கதை’! – டிசம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ்
ஒரு திரைப்படம் இளைஞர்களுக்கு பிடித்துவிட்டால் அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறுவது உறுதி. அப்படி ஒரு படமாக சமீபத்தில் வெளியான் பாடம் ‘லவ் டுடே’. அறிமுக நடிகர்கள் நடித்து மிகப்பெரிய வரவேற்பு பெற்ற அப்படத்தை தொடர்ந்து இளைஞர்களை வெகுவாக கவரக்கூடிய படமாக உருவாகியுள்ள படம் ‘கடைசி காதல் கதை’.
முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் கதை வித்தியாசமாக இருப்பதோடு, அதற்கு திரைக்கதை அமைத்து காட்சிகளை கையாண்ட விதம் இளைஞர்களை கவரக்கூடிய விதத்தில் இருப்பதோடு, படம் தொடங்கியது முதல் முடியும் வரை மிக ஜாலியாக காட்சிகளை நகர்த்தி செல்வதோடு, இரண்டு மணி நேரம் எப்படி போனது என்பது தெரியாத வகையில் படம் விறுவிறுப்பாக நகர்கிறது.
காதல் தோல்வியால் மன அழுத்தத்திற்கு ஆளாகும் இளைஞர்கள் எடுக்கும் தவறான முடிவுகளை வித்தியாசமாக கையாண்டிருக்கும் இயக்குநர் அதை அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படி சொல்லியிருப்பதோடு, இளைஞர்களும், காதலர்களும் கொண்டாடும் வகையில் சொல்லி படத்தை ரசிக்க வைக்கிறார்.
இந்த நிலையில், படத்திரிகையாளர்களுக்காக சிறப்பு காட்சிக்கு படக்குழு ஏற்பாடு செய்திருந்தது. படத்தை பார்த்த பத்திரிகையாளர்கள் படம் முழுவதையும் ஜாலியாக பார்த்து ரசித்ததோடு, குலுங்கி குலுங்கி சிரித்து ரசித்தனர்.
படம் முடிந்த பிறகு படம் குறித்து கூறிய நிருபர்கள், படம் மிக ஜாலியாக இருக்கிறது. ‘லவ் டுடே’ படத்திற்கு பிறகு இளைஞர்களை கொண்டாட வைக்கும் படமாக ‘கடைசி காதல் கதை’ உருவாகியுள்ளது. படத்தில் இடம்பெறும் இரட்டை அர்த்த வசனங்களை ரசிக்கும்படி கையாண்டிருக்கும் இயக்குநர் படம் முழுவதையும் மிக ஜாலியாக நகர்த்தி சென்றாலும், இறுதியில் காதலர்களுக்கு மட்டும் இன்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் அருமையான மெசஜ் ஒன்றையும் சொல்கிறார். படம் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும், என்று தெரிவித்தனர்.
மேலும், படத்தில் சொல்லப்படும் மையக்கரு இதுவரை எந்த படத்திலும் இடம்பெறாத ஒரு விஷயமாக இருப்பதோடு, விபரீதமானதாகவும் இருக்கிறது. ஆனால், அதை மிக அருமையாக கையாண்ட இயக்குநர் ஆர்.கே.வித்யாதரனின் திரைக்கதை, வசனம் மற்றும் காட்சி அமைப்புகள் அனைத்தும் படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்வதோடு, இறுதியில் அனைத்துக்குமான தீர்வாக சொல்லப்படுவது காதலர்களுக்கு மட்டும் அல்ல, அனைத்து தரப்பினருக்குமானதாக இருக்கிறது. ஒரு நல்ல படம், நிச்சயம் அனைவரும் பார்க்கலாம், என்று கூறி இயக்குநரை பத்திரிகையாளர்கள் பாராட்டினார்கள்.
அறிமுக நடிகர் ஆகாஷ் பிரேம்குமார், அறிமுக நடிகை ஈனாக்ஷி கங்குலி, நாயகன், நாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் ‘குக் வித் கோமாளி’ புகழ், விஜே ஆஷிக், நோபல், மைம் கோபி, சாம்ஸ், பிரியங்கா வெங்கடேஷ், அனு, பிரியதர்ஷினி, முதுன்ய, நிஷார், ஸ்வப்னா, கிருத்திகா, சாம்ஸ் என பல நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
எஸ் கியூப் பிக்சர்ஸ் சார்பில் ஈ. மோகன் தயாரித்துள்ள இப்படத்திற்கு சேத்தன் கிருஷ்ணா இசையமைக்க, சிவசுந்தர் ஒளிப்பதிவு செய்துள்ளார். பி.ஆர்.பிரகாஷ் படத்தொகுப்பு செய்ய, கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஆர்.கே.வித்யாதரன் இயக்கியுள்ளார்.