விவேக் பிரசன்னா காயத்ரி சார்லி மற்றும் பலர் நடிக்க ஆஹா ஓட்டிட்டியில் 30ம் தேதி வெளிவரும் படம் உடன்பால்
நாயகனின் பணம் தேவைக்கு தந்தையின் வீட்டை விற்க சொல்ல தந்தை முடியாது என்று சொல்ல என்ன செய்வது என்று தெரியாமல் நாயகன் தவிக்கும் நேரத்தில் அருகில் உள்ள வணிக வளாகத்திற்கு தந்தை செல்ல அந்த வணிக வளாகம் இடிந்து விட அதில் சிக்கி இறந்தவர் குடும்பத்திற்கு அரசு சார்பில் 20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று தொலைக்காட்சியில் சொல்ல
இதைக்கேட்ட நாயகன் தந்தை இடிபாடுகளில் சிக்கி இறந்து இருக்கக்கூடும் என்று நினைப்பில் 20 லட்சம் இழப்பீடு தமக்கு கிடைக்கும் நம்பிக்கையில் தங்கையுடன் பணத்தை பங்கு பற்றி பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் தந்தை உயிருடன் வர அதிர்ச்சியில் நாயகன் என்னவென்று தெரியாமல் முழிக்க வீட்டிற்கு வந்த தந்தை நெஞ்சு வலி காரணமாக மரணம் அடைய பிணத்தை வணிக வளாகத்திற்குள் போட்டுவிட்டால் அரசின் இழப்பீடு பணம் தமக்கு வந்து சேரும் என்று நினைப்பில் பிணத்தை வணிக வளாகத்திற்குள் போட முயற்சிக்க அதனால் ஏற்படும் பிரச்சனைகளை நகைச்சுவையுடன் சொல்லி இருக்கிறார் இயக்குனர்
. அண்ணன், தங்கையாக லிங்கா – காயத்ரி காமினேஷன் கச்சிதமாக பொருந்தி ருக்கிறது.ரசிக்கவும், சிரிக்கவும் வைக்கும் விவேக் பிரசன்னா
கதையின் போக்கு ஒரு வீட்டுக்குள்ளேயே நடப்பது போல் காட்சி அமைப்புகளை அமைத்திருக்கிறாய் இயக்குனர் எந்த ஒரு காட்சியிலும் ஒரு தோய்வில்லாமல் நகைச்சுவையாக நம் ரசிக்கும் படியாக அமைத்திருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள் பல ஆனாலும் கிளைமாக்ஸ் காட்சியைப் பார்த்தவுடன் பாராட்டுகளை நாம் வாபஸ் பெற்றுக் கொள்கிறேன்
உடன் பால்- பணம் பத்தும் செய்யும்