ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் டிரைவர் ஜமுனா கதைக்களம் கார் டிரைவரா இருக்கும் ஜமுனாவின் காரில் மூன்று கூலிப்படையினர் பயணம் செய்ய அவர்கள் கூலிப்படை என்பதை அறிந்த ஜமுனா அவர்கள் கொலை செய்ய போகும் நபரை காப்பாற்ற முயற்சிக்கும் போது ஒரு அதிர்ச்சியான சம்பவம் நமக்கு தெரிய வருகிறது அது என்ன திரையில் காணுங்கள்
இந்த காலம் கதாநாயகியின் காலம் போல வரும் பெரும்பாலான படங்கள் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது அந்த வரிசையில் டிரைவர் ஜமுனா வில் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கிறார் கதையின் போக்கு கூலிப்படையில் இருந்து எப்படி தப்பிப்பது என்ற திரைக்கதையில் ஐஸ்வர்யா ராஜேஷ் போராடும் காட்சிகளில் தன் நடிப்பால் நம்மை பரிதாப பட வைக்கிறார்
ஆனால் கிளைமாக்ஸில் இயக்குனர் தரும் டிவிஸ்ட் கதையின் போக்கு மட்டுமல்ல கதையில் பாதியிடங்களில் லாஜிக்கே இல்லை தந்தையை கொன்றவரை பழி வாங்கும் ஆதிகாலத்து கருவை வைத்துக் கொண்டு அதற்கு திரைக்கதையில் புதிய முலாம் பூசி புதுமையாக காட்ட முயற்சி செய்த இயக்குனருக்கு பாராட்ட வேண்டும் என்ற எண்ணம் நமக்கு இருந்தாலும் லாஜிக் மீறிய திரைக்கதையால் அந்தப் பாராட்டின் தகுதியை இழக்கிறார் டிரைவர்
ஜமுனா- டிராபிக் ஜாம்