spot_img
HomeNewsV 3 விமர்சனம்

V 3 விமர்சனம்

விபச்சாரத்தை அங்கீகார தொழிலாக அரசு அங்கீகரித்தால் பாலியல் வன்கொடுமைக்கு தீர்வு காண முடியும் என்ற கருத்தை சொல்ல வந்திருக்கும் படம் V3

நரேன் வரலட்சுமி சரத்குமார் பாவனா வரலட்சுமி சரத்குமார் எஸ்தர் மற்றும் பல நடிக்க அமுத வாணன் இயக்கத்தில் வந்திருக்கும் படம் V3

தினசரி பத்திரிகை போடும் தொழிலாக கொண்ட ஆடுகளம் நரேனுக்கு இரண்டு மகள்கள் இரண்டு பேரும் படித்துக் கொண்டிருப்பவர்கள் தாயில்லா மகள்களை பாதுகாத்து வரும் நரேன் க்கு மூத்த மகள் பாவனாவின் ஜெனரல் நாலெட்ஜ் மீது மிகுந்த எதிர்பார்ப்பு மிக்கவர்

இந்நிலையில் இரவு நேரத்தில் டூ வீலரில் வரும் பாவனாவின் வண்டி பழுதடைய அதை சரி செய்யும் நான்கு கயவர்கள் பாவனாவை பாலியல் பலாத்காரம் செய்து உயிருடன் எரித்து விடுகிறார்கள்

கொலையாளிகளை பிடித்த காவல்துறையினர் அவர்கள் தப்பிக்கும் போது என்கவுண்டரில் சுட்டுக் கொண்டு விடுகின்றனர் இறந்து போன குற்றவாளிகளின் பெற்றோர்கள் தங்கள் மகன்கள் குற்றம் அற்றவர்கள் என்று போராட்டத்தில் இறங்க விசாரணை கமிஷன் அதிகாரியாக வருகிறார் வரலட்சுமி சரத்குமார் ஐ ஏ எஸ்

உண்மையில் பாவனாவுக்கு நடந்தது என்ன என்கவுண்டர் நடந்ததற்கு காரணம் என்ன என்பதை விசாரணை முடிவில் வரலட்சுமி சரத்குமார் தெரிவிக்கும் போது நமக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறேன் அது என்ன பாருங்கள் V3

படத்தின் துவக்கம் டெல்லியில் நடந்த நிர்பயா பாலியல் வன்கொடுமையில் இருந்து பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை வரைக்கும் தீர்வு என்ன என்று கேள்வி கேட்கும் இயக்குனர் கடைசியில் அவர் சொல்லும் தீர்வு தமிழக அரசியல் சட்ட அமைப்புக்கு எதிரானதாக இருக்கிறது

விபச்சாரத்தை அங்கீகாரத் தொழிலாக அங்கீகரித்தால் பாலியல் வன்கொடுமைக்கு தீர்வு கிடைத்துவிடும் என்று சொல்லும் இயக்குனர் இது எந்த விதத்தில் சாத்தியம் என்பதை சொல்ல மறந்து விட்டார்

ஆந்திராவில் பாலத்துக்கு அடியில் நடந்த பாலியல் வன் கொடுமையை ஞாபகப்படுத்தும் வகையில் காட்சிப்படுத்தி இருக்கும் இயக்குனர ஆந்திராவில் நடந்த என்கவுண்டர் உண்மையானதா?

அல்லது அரசியல் காழ்ப்புணர்வா ? என்பது போல் திரைக்கதை அமைத்திருக்கும் நிஜம் என்ன? நடந்தது என்ன? என்பதை தெளிவுபடுத்த வேண்டுகிறேன்

ஒரு மதக்கலவரத்தினால் ஐஏஎஸ் அதிகாரி வரலட்சுமி சோர்ந்து போகும் காட்சி எதற்கு? ஏன் ? அதனால் என்ன சொல்ல வருகிறார் என்பது புரியாத புதிர்

மனித உரிமை கமிஷன் விசாரணை அதிகாரியாக ஒருவர் நியமிக்கும் போது ஹோம் மினிஸ்டர் இருந்து போன் வருகிறது பிறகு வரலட்சுமி சரத்குமார் நியமிக்கப்படுகிறார் இறுதியில் அரசுக்கு எதிராக தான் அதுவும் முதல்வர் மீதுதான் விசாரணை கமிஷன் அறிக்கை வருகிறது

பிறகு எதற்காக நேர்மையான அதிகாரி வரலட்சுமி சரத்குமாரை இந்த கமிஷன் தலைவராக ஹோம் மினிஸ்டர் பரிந்துரைத்தார் என்பதும் புரியாத புதிராக தான் இருக்கிறது

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பாவனா தப்பித்து இறுதி காட்சியில் வருகிறார் அதுவரை அவர் எங்கிருந்தார் ? யாரால் காப்பாற்றப்பட்டார்? புரியாத புதிராக இருக்கிறது

திரைக்கதையில் போலி என்கவுண்டர் பற்றி சொல்ல வருகிறாரா இயக்குனர் அல்லது பாலியல் வன்கொடுமைக்கு தீர்வு சொல்ல வருகிறாரா புரியவில்லை

ஒரு மிகப்பெரிய ஜாதி கலவரத்தை
ஒரு கதவு
ஒரு அருவா
ஒரு வெட்டு
மூலம் சிக்கனப்படுத்தி இருக்கும் இயக்குனர் காட்சி அமைப்புகளை தொய்வின்றி நகர்த்திருக்கலாம்

தலைப்பில் வெற்றியின் குறியீடு V இருக்கிறது ஆனால் …..???

Must Read

spot_img