spot_img
HomeNewsஜிவி பிரகாஷ்- பாரதிராஜா- இவானா நடிக்கும் 'கள்வன்'

ஜிவி பிரகாஷ்- பாரதிராஜா- இவானா நடிக்கும் ‘கள்வன்’

ஆக்செஸ் ஃபிலிம் ஃபேக்டரி G. தில்லி பாபு வழங்கும் PV ஷங்கர் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ்- பாரதிராஜா- இவானா நடிக்கும் ‘கள்வன்’

ஆக்செஸ் ஃபிலிம் ஃபேக்டரி G. தில்லி பாபு தயாரிப்பில் கமர்ஷியல் வெற்றிப் பெறக்கூடிய எதிர்ப்பார்ப்பில் உள்ள புதிய திரைப்படத்திற்கு ‘கள்வன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ஜிவி பிரகாஷ், மூத்த பட இயக்குநரான பாரதிராஜா மற்றும் இவானா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பாலா இயக்கத்தில் வெளியான ‘நாச்சியார்’ படத்தில் ஒன்றாக இணைந்து நடித்ததற்கு பிறகு ஜிவி பிரகாஷ் மற்றும் இவானா இந்தப் படத்தில் நடிக்கின்றனர். காமெடி அட்வென்சர் ட்ராமாவாக உருவாகி வரும் இந்தப் படத்தில் பல த்ரில்லர் தருணங்கள் உள்ளன.

PV சங்கர் ‘கள்வன்’ படத்தை இயக்குவது மட்டுமல்லாமல் ஒளிப்பதிவையும் கையாண்டுள்ளார். இதுமட்டுமல்லாமல், ரமேஷ் அய்யப்பனுடன் இணைந்து கதை திரைக்கதையும் எழுதியுள்ளார். இவர்கள் இருவரும் ராஜேஷ் கண்ணாவுடன் இணைந்து படத்திற்கான வசனத்தையும் எழுதியுள்ளனர்.

ஜிவி பிரகாஷ், பாரதிராஜா மற்றும் இவானா இவர்கள் தவிர்த்து தீனா, ஜி. ஞானசம்பந்தம், வினோத் முன்னா மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் படத்தின் ட்ரைய்லர், ஆடியோ மற்றும் உலகம் முழுவதும் படம் திரையரங்குகளில் வெளியாகும் தேதி ஆகியவை குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

படத்தின் தொழில்நுட்பக் குழு விவரம்:

தயாரிப்பு: G. தில்லி பாபு,
தயாரிப்பு நிறுவனம்: ஆக்செஸ் ஃபிலிம் ஃபேக்டரி,
ஒளிப்பதிவு மற்றும் இயக்கம்: PV சங்கர்,
இசை: ஜிவி பிரகாஷ் குமார்,
படத்தொகுப்பு: ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா,
டீசர் கட்: எடிட்டர் சேன் லோகேஷ்,
கலை: NK ராகுல்,
சண்டைப்பயிற்சி: திலீப் சுப்பராயன்,
கதை, திரைக்கதை: ரமேஷ் அய்யப்பன் & PV சங்கர்,
வசனம்: ரமேஷ் அய்யப்பன், PV சங்கர் & ராஜேஷ் கண்ணா
கூடுதல் திரைக்கதை: SJ அர்ஜூன் & சிவக்குமார் முருகேசன்,
நிர்வாகத் தயாரிப்பாளர்: பூர்ணேஷ்,
தயாரிப்பு நிர்வாகி: SS ஸ்ரீதர்,
கிரியேட்டிவ் புரொட்யூசர்: K.V. துரை,
பாடல் வரிகள்: சிநேகன், ஏகாதேசி, மாயா மகாலிங்கம், நவக்கரை நவீன் பிரபஞ்சம்,
மேலாளர்: அறந்தை பாலா, மணி தாமோதரன்,
ஆடை வடிவமைப்பு: கிருஷ்ண பிரபு,
படங்கள்: E. ராஜேந்திரன்,
உடை: சுபியர்,
ஒப்பனை: வினோத் சுகுமாறன்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா, ரேகா D’One,
மார்க்கெட்டிங் & புரோமோஷன்ஸ்: DEC
ஒலி வடிவமைப்பு: Sync Cinemas,
DI – Lixo Pixels,
VFX மேற்பார்வை: கிரண் ராகவன் (Resol VFX),
விளம்பர வடிவமைப்பாளர்: வின்சி ராஜ்

Must Read

spot_img