தளபதி விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் தில்ராஜ் தயாரிப்பில் மக்களின் மிகுந்த எதிர்பார்ப்பில் வெளி வந்திருக்கும் படம் வாரிசு சரத்குமார் பிரகாஷ் ராஜ் ஷாம் என நட்சத்திர பட்டாளங்கள் களம் இறங்க பொங்கல் விருந்துக்கு படையலாக வருகிறது வாரிசு
கதைக்களம் சரத்குமாருக்கு மூன்று மகன்கள் இந்தியாவில் விரல் விட்டு aஎண்ணக்கூடிய தொழில் அதிபர்களில் ஒருவரில் சரத்குமார் அவரின் அவர் தொழிலுக்கு அடுத்த வாரிசு யார் என்பதை படத்தின் கதை கரு
அந்த வாரிசு படம் ஆரம்பிக்கும் போதே விஜய் தான் என்று பார்க்கும் அனைவருக்கும் தெரிந்தாலும் அது எப்படி ஏன் எதனால் என்பதை திரைக்கதை அமைத்து குடும்பத்துடன் அனைவரும் பார்க்கும் படியாக ஒரு குடும்ப காவியமாக இயக்கியிருக்கிறார் வம்சி
ஒரு இடைவெளிக்கு பிறகு விஜய் அவர்கள் குடும்பங்கள் கொண்டாடும் வகையில் குடும்ப உறவுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் ஒரு கதையை தேர்ந்தெடுத்து இருப்பது அவர் வெற்றியின் ஒரு மைல் கல்லாக இருக்கிறது
குடும்பத்துடன் பார்க்கும் படமாக இருந்தாலும் விஜயின் ரசிகருக்கு எந்த குறையும் இல்லாமல் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் ஆக்ஷன் என அனைத்து அம்சங்களையும் குறை இல்லாமல் தந்து இருக்கிறார் இயக்குனர்
விஜயின் நடனம் துள்ளல் விஜய் நடனத்துக்கு போட்டி அவரே தான் சண்டை காட்சிகளும் ரசிகனை விசில் அடிக்க வைக்கும்
கம்பெனியின் சேர்மனாக நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர் சொல்லும் குட்டிக்கதை ஒரு கொண்டாட்டம் நாயகி ராஷ்மிகா காதலுக்கும் பாடலுக்கும் வருகிறார்
சரத்குமார் முகத்தில் முதிர்ச்சி திரிந்தாலும் நடிப்பில் அவர் எப்படியோ அப்படியே
பிரபு குடும்ப டாக்டராக தன் வேலையை செய்கிறார் சரத்குமாரின் தொழில் எதிரியாக பிரகாஷ் ராஜ் அவரும் அவர் பாணியில் தன் கடமையை செய்திருக்கிறார்
விஜயின் அண்ணனாக ஷாம் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் விஜயுடன் போட்டி போடும் இருவரும் நடிப்பில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் இல்லை என்பதை நிரூபிக்கின்றனர்
ஆர்ப்பரிப்பில்லாத நகைச்சுவையில் யோகி பாபு ஸ்கோர் செய்கிறார்
எஸ் ஜே சூர்யா சில நிமிட காட்சியாக இருந்தாலும் அனைவரையும் ஓரங்கட்டி தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டிருக்கிறார்
ஒவ்வொரு காட்சியிலும் பிரம்மாண்டம் தெரிய வேண்டும் என்பதற்காக கலை இயக்குனர் பங்கு மிகப் பெரியது
தமனின் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிகனுக்கு விருந்து ஆனாலும் சில இடங்களில் ஏ ஆர் ரகுமானின் வாடை வந்து போகிறது
சொந்த பந்தங்களில் உணர்வுகளை சொல்லும் வாரிசு வார்த்தைகளை { வசனங்களை } சொல்ல மறந்து விடுகிறது